சபரிமலையில் நடை திறப்பு.. தினமும் 90,000 பக்தர்கள் அனுமதி.. ஆன்லைன் -ஸ்பாட் புக்கிங் செய்வது எப்படி?
சபரிமலை: நாளை கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கி சபரிமலை கோவிலுக்கு செல்ல உள்ளனர். பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் பதிவின் மூலம் தினமும் 70 ஆயிரம் பக்தர்கள்வரை அனுமதிக்கப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி ‛ஸ்பாட் புக்கிங்' முறையில் தினமும் 20,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த புக்கிங்கை எப்படி செய்வது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல - மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான பக்தர்கள் இருமுடி சுமந்து சரண கோஷம் முழங்க ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை கோவிலில் டிசம்பர் 27 ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தேவசம்போர்டு தலைவருமான ஜெயக்குமார் மேற்பார்வையில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானம், பம்பா மற்றும் மலையேற்றப் பாதைகளில் விரிவான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சந்திரானந்தன் சாலையில் பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளது.வலியநாட்டுப் பந்தல் மற்றும் சரம்குத்தி இடையே பக்தர்களின் வரிசைக்காக கூடுதல் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பா மற்றும் சன்னிதானம் இடையேயான பகுதிகளில் 56 இடங்களில் இஞ்சி தண்ணீர் மற்றும் சூடான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவசம் போர்டின் தூய்மை பணியாளர்களுடன் 1,200 தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. இவர்களுடன் 420 தற்கொலி பணியாளர்களும் உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். 1,005 கழிவறைகளுடன் கூடுதலாக 164 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் பெண்களுக்கு 70 கழிவறைகள் உள்பட 300 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் 58 பயோ கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர கால மருத்துவ உதவிக்காக 15 இடங்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் கோவிலில் 90,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் https://sabarimalaonline.org மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் புக்கிங் கேன்சலாகும் பட்சத்தில் அந்த எண்ணிக்கையில் ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும். ஆன்லைன் புக்கிங் நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 1ம் தேதி வரை மொத்தம் 22 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஸ்பாட் புக்கிங் மொத்தம் 6 இடங்களில் நடைபெற உள்ளது.
பம்பை, நீலக்கல், எருமேலி, வண்டிபெரியார், சத்தரம், செங்கானூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கவுண்ட்டர்களில் ஸ்பாட் புக்கில் நடைபெற உள்ளது. தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் அனுமதி வழங்கப்பட உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கப்பட உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 18 படியின் அருகே சிறப்ப வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு டோலி சேவை உள்ளது. மல்லிகாபுரத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட உள்ளது. சன்னிதானத்தில் 24 மணிநேரமும் பிசியோதெரபி மையம் இஙய்க உள்ளது. பம்பை -சன்னிதானம் இடையே ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் சேவைக்காக போலீஸ், சுகாதாரம், தீயணைப்பு வீரர்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications