திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை கோவில் விவகாரம்: தீவிரம் அடைந்த போராட்டம், கேரளாவில் இன்று பந்த்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    போராட்டத்தை தொடர்ந்து சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து கேரளாவில் இன்று 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

    Sabarimala temple row: 12 hour bandh in Kerala

    இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள்.

    இதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றதை நேற்று மாலை காண முடிந்தது.

    10 முதல் 10 வயது வரை உள்ள பெண்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலுக்கு செல்லவில்லை. போராட்டத்தினால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணிநேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

    அதன் பேரில் இன்று கேராளவில் முழு அடைப்பு போராட்டம் துவங்கி நடந்து வருகிறது.

    English summary
    Section 144 has been imposed in four places as people protest agains the entry of women of all ages into Sabarimala temple. Sabarimala protection committee is conducting 12 hours bandh in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X