சபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. கேரள அரசு அதிரடி முடிவு.. என்ன நடக்கிறது?
சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.
ஆனால் கோவிலுக்குள் ஒரு பெண் கூட கடைசி வரை நுழையவில்லை. இன்று இந்த கோவிலின் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
|
எத்தனை பேர்
இதற்காக கோவிலுக்கு முன் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இன்று மாலை இன்னும் அதிக எண்ணிக்கையில் போலீசார் வர உள்ளனர். அதேசமயம் ஆண் பக்தர்களும் கோவிலை நோக்கி வர தொடங்கி இருக்கிறார்கள்.
|
முதல்முறை பெண் காவலர்கள்
இந்த நிலையில் முதல்முறையாக சபரிமலை கோவில் சன்னிதானத்தில் பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 15 பெண் காவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் 50 வயதிற்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதட்டமான சூழ்நிலை
இதுவரை அங்கு பெண் காவலர்கள் பாதுகாப்பிற்கு நின்றதே இல்லை. முதல்முறை இப்படி பெண் காவலர்கள் அங்கே நிற்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்று பெண்கள் அந்த கோவிலுக்குள் நுழைய போகிறார்களா என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இன்று செல்வார்களா
அங்கு போராட்டக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறார்கள். நிறைய போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதால் சென்ற மாதம் போல நிறைய போராட்டக்காரர்கள் அங்கே இல்லை. இன்று மாலை சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்கிறீர்களா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications