பெண்கள் தரிசனத்தை அடுத்து பரிகார பூஜை.. சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டது!
சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்ததை அடுத்த, கோவில் நடை திடீரென்று மூடப்பட்டுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்ததை அடுத்து, கோவில் நடை திடீரென்று மூடப்பட்டது. பரிகார பூஜை முடிந்து கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் நுழைந்து உள்ளனர். இவர்கள் கோவிலில் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால் தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இரண்டு பெண்கள்
மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண் மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண் ஆகியோர் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடைக்கப்பட்டது
இந்த நிலையில் சபரிமலைக்குள் இரு பெண்கள் நுழைந்ததை அடுத்து திடீரென நடை அடைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பக்தர்கள் எல்லோரும் தரிசனத்திற்கு பின் வெளியே அனுப்பப்பட்டனர். போலீஸார் உதவியுடன் பக்தர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.

போலீஸ் குவிப்பு
அதன்பின் மேல்சாந்தியுடன் தந்திரி ஆலோசனை நடத்தினார். கோவில் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நடை சாத்தப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவிலை சுத்தம் செய்வதற்காக கோவில் நடை சாத்தப்பட்டது. பந்தளம் ராஜா வம்சத்தை சேர்ந்த சஷி வர்மா கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால், கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திறப்பு
இதையடுத்து பெண்கள் உள்ளே நுழைந்ததால், கோவிலை சுத்தம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. கோவிலை சுத்தம் செய்தபின் கோவிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது. தற்போது பரிகார பூஜை முடிந்து கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மீண்டும் வரிசையாக உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications