திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடுபிடிக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்! சோனியா கிரீன் சிக்னல்.. பின்னணி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு எம்பி சசி தரூர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங். தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் கடந்த 23 வருடங்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகி வருகிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் தலைவராக பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் சோனியா காந்திக்கு உடல்நிலை. இனியும் அவரால் கட்சியை வலுவாக வழிநடத்த முடியாது. இதை அவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கூறிவிட்டார்.

“ட்விஸ்ட்” - புத்துணர்ச்சி பெறுமா காங்கிரஸ்? நெருங்கும் தலைவர் தேர்தல்.. ராஜஸ்தான் முதல்வரின் முடிவு “ட்விஸ்ட்” - புத்துணர்ச்சி பெறுமா காங்கிரஸ்? நெருங்கும் தலைவர் தேர்தல்.. ராஜஸ்தான் முதல்வரின் முடிவு

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

இன்னொரு பக்கம் நான் காங்கிரஸ் கட்சிக்காக போராடுகிறேன். களத்தில் நிற்கிறேன். பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் தலைவராக விருப்பமில்லை. ஆளை விடுங்கள் என்று ராகுல் காந்தியும் ஒதுங்கிக்கொண்டார். இதனால் இப்போது தலைவராக போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தல்

தேர்தல்

இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. . 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் கெலாட்தான்.

நெருக்கம்

நெருக்கம்

ஜி 23 தலைவர்களுக்கும் இவர் எதிரானவர். அசோக் கெலாட் வந்தால் கட்சியில் நேரு குடும்பத்திற்கான மதிப்பும் அப்படியென்ன இருக்கும், அதே சமயம் வியூக ரீதியாகவும் கட்சி வலிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு எம்பி சசி தரூர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங். தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அசோக் கெலாட் vs சசி தரூர் இடையே கடுமையான நிலவ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசி தரூர்

சசி தரூர்

சசி தரூர் திருவனந்தபுரம் எம்பியாக இருக்கிறார். இவர் முன்பே தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தாக தகவல்கள் வந்தன. காங்கிரஸ் கட்சியில் சோனியா - ராகுலுக்கு எதிராக இருக்கும் ஜி 23 தலைவர்களில் இவரும் ஒருவர். சோனியாவின் தலைமைக்கு எதிராக இவர் பேசி வந்தார். இந்த நிலையில்தான் இவர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இவர் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் சோனியா காந்தியை சந்தித்து தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக கூறி உள்ளார். அதற்கு சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

மோதல்

மோதல்

கட்சியில் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று விரும்பும் நிர்வாகிகள், அவருக்கு நெருக்கமான அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் மாற்றம் வேண்டும் என்றும் விரும்பும் தலைவர்கள் சசி தரூருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மாபெரும் மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் முடிவுகளில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Sashi Tharoor vs Ashok Gehlot for Congress chief: Sonia Gandhi gives green signal to Trivandram MP to run the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X