பாலியல் தொல்லை தந்த லாட்ஜ் ஓனர் கைது.. தமிழக பெண்ணுக்காக ரவுண்டு கட்டித் தூக்கிய கேரள போலீஸ்!
தமிழக பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த லாட்ஜ் ஓனர் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்: லாட்ஜில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்த லாட்ஜ் ஓனர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள அம்பல வயலில் ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் தங்கி இருந்தார். சம்பவத்தன்று அந்த பெண், கணவருடன் லாட்ஜ் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன், தம்பதியிடம் வம்பு செய்துள்ளார். இதனால் அந்த பெண் சஜீவானந்தத்தை தட்டி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணையும், கணவரையும் நடுரோட்டிலேயே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

மகளிர் ஆணையம்
இதை சுற்றி நின்றவர்கள் வேடிக்கை பார்த்ததுடன், செல்போனிலும் வீடியோ எடுத்து கொண்டு நின்றனர். அந்த வீடியோவையும் இணையத்தில் போடவும், அது வைரலானதுடன், கேரள மாநில மகளிர் ஆணைய தலைவியின் பார்வைக்கும் சென்றது.

தலைமறைவு
இதையடுத்து தம்பதி நடுரோட்டில் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். எனவே அம்பலவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், அதற்குள் சஜீவானந்தனும், லாட்ஜ் ஓனர் விஜயகுமாரும் எஸ்.ஆகிவிட்டனர்.

லாட்ஜ் ஓனர்
இதனிடையே தமிழக பெண் கேரளாவில் தாக்கப்பட்ட தகவல் கோவை போலீசாருக்கு கிடைத்ததும் உடனடியாக கேரளாவுக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, லாட்ஜ் ஓனர் விஜயகுமார், சஜீவானந்தன், அவரது நண்பர் உட்பட 3 பேருமே தமிழக பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

கைது
இதையடுத்து அம்பலவயல் போலீசாரும் அவர்கள் தரப்பு விசாரணையை துவங்கி, 3 பேரையும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இறுதியில் லாட்ஜ் ஓனர் விஜயகுமார் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து அங்கேயே கைது செய்தது போலீஸ். மற்ற 2 பேர் இன்னும் தலைமறைவாகவே உள்ளதால் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications