தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பரப்பப்படும் தகவல்கள் போலி.. சசிதரூர் திட்டவட்டம்
திருவனந்தபுரம்: தென்னிந்தியாவில் இந்த முறை நாங்கள் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜவினர் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்த கேரள காங்கிரஸ் எம்பி சசிதரூர், தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பரப்பப்படும் தகவல்கள் போலியானவை என்று மறுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல்களை பொறுத்த அளவில், தென் மாநிலங்களை தேசிய கட்சிகள் பெரியதாக கண்டுகொள்வதில்லை. காரணமாக இங்கிருக்கும் சீட்களின் எண்ணிக்கைதான். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் என 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தமாக 131 தொகுதிகள்தான் வரும். ஆனால், உத்தரப் பிரதேசம்+பீகார் என இரண்டு மாநிலங்களை மட்டும் முழுமையாக கைப்பற்றினால் 120 தொகுதிகளை கொத்தாக அள்ளி சென்றுவிடலாம்.

எனவேதான் தேசிய கட்சிகளின் பார்வை தென் மாநிலங்கள் மீது அதிகம் படுவது கிடையாது. ஆனால் இந்த முறை களம் மாறியிருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவையும், தெலங்கானாவையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ள நிலையில், பாஜக எப்படியாவது தென் மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்று தடாலடியாக களமிறங்கியுள்ளது. இதற்கேற்றார் போல கருத்துக்கணிப்புகளும், தென் மாநிலங்களில் பாஜக ஒரு சில இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து கேரள காங்கிரஸ் எம்பி சசிதரூர் விளக்கமளித்துள்ளார். அதாவது, தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பரப்பப்படும் தகவல்கள் போலியானவை என்று கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், "இந்தி, ஹிந்துத்வா, ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் ஆதிக்கம் என்பது நமது பன்முக தன்மைக்கு ஆபத்தானதாகும். மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரத்தில் பின்னி பிணைந்திருக்கிறது. அது அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் வகுப்புவாத வெறுப்பு ஆகிவை குறித்து மக்கள் புரிந்துக்கொண்டர். மட்டுமல்லாது இந்த பிரச்னைகளுக்கு பொறுப்பு பாஜகதான் என்பதையும் அவர்கள் புரிந்துக்கொண்டுள்ளனர்.
தென் மாநிலங்களில் பாஜக காலூன்றும் என்று கூறி வருகிறார். உண்மையில் அவர்கள் தென் மாநிலங்களுக்கு என்ன செய்தார்கள்? தென் மாநிலமான கேரளாவுக்கு அவர்கள் மூன்று வாக்குறுதிகளை கொடுத்திருந்தனர். முதல் வாக்குறுதி எய்ம்ஸ் மருத்துவமனை பற்றியது. கேரளாவுக்கு எய்ம்ஸ் கொண்டு வருவோம் என அவர்கள் கூறினார். ஆனால் என்ன நடந்தது? எய்ம்ஸ் தற்போது வரை வரவில்லை.
இரண்டாவது தேசிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் அமையும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி பல்கலைக்கழகம் அமைந்தது. ஆனால், கேரளாவுக்கு பதிலாக குஜராத்தில் அந்த பல்கலைக்கழகம் அமைந்தது. மூன்றாவதாக திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என்று கூறினார்கள். அதுவும் நடக்கவில்லை.
இப்படி மாநிலத்திற்கான பிரதான கோரிக்கையை நிறைவேற்றாத அவர்களை மக்கள் எப்படி தேர்ந்தெடுப்பார்கள்? அதேபோல வளர்ச்சி இருக்கும் இடத்தில் பாஜக புறக்கணிக்கப்படும். வளர்ச்சிக்கு கல்வியறிவும், எழுத்தறிவும் மிகவும் முக்கியம். தென் மாநிலங்கள் இதில் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்கள். எனவே இங்கு வளர்ச்சி இருக்கிறது. அதனால் மக்கள் பாஜகவை புறக்கணிக்கிறார்கள்.
எங்கள் வரலாறு வித்தியாசமானது. இங்கு பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த தேர்தலில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் நடந்துக்கொள்வார்கள். அதாவது, அரசியலமைப்பின் 91வது சட்ட திருத்தம் 2026ல் காலாவதியாகும் போது, அவர்கள் இந்தி பேசும் மத்திய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications