நீண்ட நகங்கள் கொண்ட பெண்ணை எனக்கு பிடிக்கும்! நடிகையிடம் அத்துமீறிய மலையாள நடிகர் சித்திக் ராஜினாமா
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் சித்திக் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், சித்தக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லாலிடம், சித்திக் வழங்கினார்.
மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் வந்த நிலையில் நடிகர், இயக்குநர், கேரள மாநில சலசித்ரா அகாதெமியின் தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகாரில் சிக்கியதை அடுத்து அந்த மாநில பொதுச் செயலாளர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் சித்திக் மீது நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார். அதில் நடிகர் சித்திக் அவரது மகன் நடிக்கும் தமிழ் படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். சித்திக் நடிப்பில் வெளியான ஒரு படத்தின் முன்னோட்டம் நடந்தது. அது முடிந்ததும் என்னை திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள்.
அங்கு சித்திக் என்னிடம் அட்ஜஸ்ட் செய்ய தயாரா என நேரடியாகவே கேட்டார். அப்போது எனக்கு 21 வயது என்பதால் அவர் கேட்டதற்கான அர்த்தம் புரியவில்லை. அப்படி என்றால் என்ன என கேட்டதற்கு நடிகர் சித்திக், "நீண்ட நகங்களை கொண்ட பெண்களை எனக்கு பிடிக்கும்" என கூறி, என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்.
ஒரு மணி நேரம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து, "இதை வெளியே சொன்னால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" என பேசினார். சித்திக்கிற்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கிறார்கள். அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார், அவருக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சினை நடந்தால் சும்மா இருப்பாரா, திரையுலகில் இப்படி முகமூடி அணிந்து திரியும் நபர்களை பற்றி நினைக்கும் போது வெட்கப்படுகிறேன் என அந்த நடிகை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சித்திக், இன்று மலையாள திரையுலகத்தின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லாலிடம் சமர்ப்பித்துள்ளார்.
மலையாள நடிகர் திலீப் குமார், தமிழ், மலையாள படங்களில் நடித்த நடிகை ஒருவரை காரில் கடத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பெயரில் திலீப் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்த ஆண்டே நிறைய நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக கேரள அரசிடம் புகார் அளித்தனர். அதாவது மலையாள திரையுலகமே 15 பேரின் பிடியில் சிக்கியிருப்பதாகவும் அவர்களிடம் அட்ஜெஸ்ட் செய்தால் மட்டுமே தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கமிஷன், பல்வேறு நடிகைகளிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. ஆனால் அது தற்போது வரை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறிக்கையை மலையாள நடிகைகள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு தங்களது பெயர் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்குமா என அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உண்மையில் மலையாள திரையுலகம் ஒரு 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிகம் வைப்பதாகவும் நடிகைகள் குற்றம் கூறியிருந்தனர். அது போல் தன்னை கட்டிப்பிடிக்க ஒரு நடிகர் 17 முறை ரீடேக் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நடிகர் திலகனின் மகள் சோனியாவும் ஹேமா கமிஷன் அறிக்கையை ஆமோதித்தார். அவர் கூறியிருப்பதாவது: அந்த 15 பேர்தான் மலையாள சினிமாவை ஆட்டி படைக்கிறார்கள். எனது அப்பா திலகன் இந்த தவறுகளை தட்டி கேட்டதால் அவரை திரையுலகினர் எதிர்த்தனர். இந்த நிலையில் ஒரு நடிகர் தனது தந்தையின் இறப்புக்கு பிறகு, தன்னிடம் போனில் பேசியதாகவும், அப்போது தன்னை மகளே என அழைத்துவிட்டு பிறகு தன்னிடம் பாலியல் ரீதியாக எதையோ எதிர்பார்ப்பது போலவும் பேசியிருந்தார். இது தனக்கு பேரதிர்ச்சியாக இருந்ததாகவும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications