எர்ணாகுளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. புதுமண தம்பதியை உயிர் தப்ப வைத்த சின்ன விஷயம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்து தலைக்குப்புற கார் விழுந்தது. இந்த விபத்தில் காருடன் சிக்கிய புதுமண தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்கள். அவர்கள் காரோடு கவிழ்ந்த போதிலும் சீட் பெல்ட் போட்ட காரணத்தால் உயிர் தப்பி உள்ளார்கள். அவர்கள் எப்படி உயிர் தப்பித்தார்கள் ? எர்ணாகுளம் பகுதியில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கராவைச் சேர்ந்த 27 வயதாகும் கார்த்திக் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஸ்மயா(26). இவரது சொந்த ஊர் எர்ணாகுளம் மாவட்டம் ஆகும். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. கார்த்திக், விஸ்மயா இருவருமே தற்போது ஒரு கல்லூரியில் விவசாயம் சார்ந்த படிப்பும் படித்து வருகிறார்.

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி கார்த்திக் தனது மனைவி விஸ்மயாவை அழைத்துக் கொண்டு. காரில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் காரில் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற காரை, கார்த்திக் ஓட்டினார். ஆலுவா அருகே கோலஞ்சேரி அடுத்த பாங்கோடு பகுதியில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் கார் வேகமாக இறங்கி, ஏறியது. இதில் திடீரென கார்த்திக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் அந்த கார், சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு தலைக்குப்புற கிணற்றுக்குள் விழுந்தது. 15 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 5 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. இதனால் கார் உடையவில்லை.
இதனிடையே காருக்குள் இருந்த தம்பதி, கிணற்றுக்குள் கத்தி கூச்சலிட்டனர். தங்களை காப்பாற்றும்படி இருவருமே அபாயக் குரல் எழுப்பினார்கள். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், கிணற்றை எட்டிப்பார்த்தனர். அதில் கார் விழுந்து கிடப்பதையும், அதற்குள் தம்பதியினர் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுமக்கள் எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். இதையடுத்து காரில் சிக்கியிருந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி விஸ்மயா ஆகியோரை நீண்ட நேர போராட்டத்திற்குபின் மீட்டனர். அவர்களை தீயணைப்பு துறையினர் ஏணி மூலம் பத்திரமாக மேலே கொண்டு வந்து காப்பாற்றினார்கள்.
காருக்குள் அவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் எந்த காயம் இன்றியும், கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் கார் முழுவதுமாக மூழ்காததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பின்னர் கிணற்றில் விழுந்த கார் கிரேன் கொண்டுவரப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது. கிணற்றில் கார் விழுந்து, அதில் சிக்கிய புதுமண தம்பதி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவேளை அவர்கள் சீட் பெல்ட் அணியாமல் பயணித்திருந்தால், அவர்கள் உயிருடன் மீண்டு வந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications