தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது... மழைப்பொழிவு 43 சதவீதம் குறைந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இடுக்கியில் இயல்பை காட்டிலும் 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. முதலில் தீவிரம் காட்டிய மழை அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது.

Recommended Video

இதே போல், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபோது, நாட்டின் பல்வேறு இடங்களில் அதிக மழை பெய்தது. கூடுதலாக இருந்த மழைப் பொழிவு, தற்போது பற்றாக்குறையாக மாறியுள்ளது. வாயு புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை பெய்வதில் பாதிப்பை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று (10-ந்தேதி) வரை பெய்த தென்மேற்கு பருவமழையை வைத்து பார்க்கும்போது இது சராசரியை விட 43 சதவீதம் குறைவான மழைப்பொழிவு என்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 890.9 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 510.2 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது.
கேரள மாநிலத்திலேயே மிகவும் குறைவாக மழை பெய்துள்ள இடம் இடுக்கியாகும். இங்கு 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் சராசரியாக 394.5 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இதுவரை 302.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அதே போல வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதம் மழை குறைந்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications