கேரளாவில் அதிர்ச்சி! பல்கலைக்கழக விழாவில் கூட்ட நெரிசல்.. 4 மாணவர்கள் பலி.. 64 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர். மேலும் 64 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (CSUT) பல்கலைக்கழகம் உள்ளது. இந்தக் கல்லூரியில் டெக் பெஸ்ட் எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று இசை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திறந்த வழி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் திரண்டு இருந்தனர்.

இசை நிகழ்ச்சியைக் காண கேட் பாஸ் வைத்து இருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக நுழைவு வாயிலில் நுற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால், வாசலில் திரண்டு இருந்த மாணவ மாணவிகள் பலரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 2 மாணவிகள் 2 மாணவர்கள் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 64 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து நிகழ்விடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வீணா ஜார்ஜ் கூறியதாவது:-
பலியானவர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பலியானவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பேர் அஸ்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பல்கலைக்கழகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications