ரேஷன் கடைகளில் இனி கோதுமைக்கு பதிலாக ராகி.. அதிரடியை கையில் எடுத்த அரசு.. சபாஷ் காரணம்
ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதிலாக ராகி வினியோகிக்க கேரள மாநிலம் முடிவு செய்துள்ளது
திருவனந்தபுரம்: ரேஷன் கடைகளில் கோதுமைக்கு பதில் ராகி, கொண்டை கடலை வினியோகிக்க, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் குறைவான விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று வருகின்றனர்...
மேலும் அந்தந்த மாநில அரசுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களையும், ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கி வருகிறது.
அந்த வகையில், கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை உட்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. ஆனால், இதில் சில மாற்றங்களை செய்ய, மாநில அரசு முடிவு செய்துள்ளதாம்.. காரணம், கேரளா மாநிலத்தை பொறுத்தவரை, இயற்கை சீற்றங்களில் அடிக்கடி சிக்கி கொள்ளும்.. கொரோனா முதல், வெள்ளம், புயல் பாதிப்பு வரை கேரள மாநிலம் பாதிக்கப்படும்..

மலைகிராமம்
அந்தவகையில், இப்போது, குரங்கு அம்மை பரவி கொண்டு வருகிறது.. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக இந்த குரங்கு அம்மை பரவி வருகிறது. இதுவரை 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க கேரள சுகாதாரத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது... அதன் ஒருபகுதியாக, அம்மாநில சுகாதார துறையினர் மலையோர மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போதுதான், அந்த பகுதி மக்களுக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது... இதனை உடனடியாக சரி செய்ய, மலையோர மக்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவுகளை வழங்க ஆய்வு குழுவினர் கேரள அரசுக்கு சிபாரிசும் செய்துள்ளனர்.. அந்த சுகாதார குழுவினர் அளித்த ஆய்வறிக்கையின்படி கேரள அரசு மலையோர கிராம மக்களுக்கு ராகி வகை உணவு வகைகளை வினியோகிக்க முடிவு செய்துள்ளது.

வயநாடு
இதையடுத்து, கோதுமைக்கு பதிலாக ராகி, பருப்பு மற்றும் கொண்டை கடலை வகை உணவினை ரேசன் மூலம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளது. முதல் கட்டமாக இந்த உணவு பொருள்களை கேரளாவின் வயநாடு, இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் அறிமுகம் செய்யவும் கேரள அரசு திட்டமிட்டு உள்ளது... இந்த 3 மாவட்டங்களில்தான், ரத்த சோகை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டதாம்..

பால் - சிற்றுண்டி
எனவே இந்த மாவட்டங்களில் கோதுமைக்கு பதில் ரேசன் கடைகளில் ராகி வினியோகிக்க தேவையான ராகி மற்றும் கொண்டை கடலை வகைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது.. அதேபோல, நம் தமிழ்நாட்டிலும், முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்து வருகிறது.

எலும்பு வளர்ச்சி
தற்போது, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் பசியின்றி இருக்கவும், ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறைபாட்டை போக்கவும், சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால், குழந்தைகளின் கண் பார்வைக்கும், எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கும், அறிவு கூர்மைக்கும், பிரதான உணவு பால் ஆகும்.. 100 மி.லி, பாலில், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ள நிலையில், பள்ளிக்குழந்தைகளுக்கு, சிற்றுண்டி திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications