வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய பெண்கள் முயற்சி... 5 பேர் அதிரடி கைது
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய திருப்பூரில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீலாதேவி, காந்திமதி, ரேவதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனுமதிக்க வேண்டும்
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, போலீஸ் பாதுகாப்புடன் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அர்ஜுன் சம்பத் விளக்கம்
வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழைய முயன்றது ஏன்? என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விளக்கமளித்துள்ளார். அதில், சபரிமலை புனிதம் காக்க வேண்டும். அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல், மசூதிக்குள் செல்ல அனுமதிக்காமல் பெண்கள் உரிமையை நிலைநாட்ட மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறினார்.

இரட்டை வேடம்
பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுகிறார். ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு மறு கண்ணுக்கு வெண்ணெய் என்பது போல் உள்ளது. இந்துகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மசூதியை இழிப்படுத்தாவோ, இஸ்லாமியர்களை புண்படுத்தவோ வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள ஒரு தலைபட்சமான நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

பதவி விலக வேண்டும்
முன்னதாக, சபரிமலையில் பெண்களைக் அனுமதித்த கேரளா அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சபரிமலை கோவிலின் புனிதத்தைக் கெடுத்த பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் எனவும் சபரிமலை விவகாரம் தொடர்பாக, தொடர் போராட்டங்களைக் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications