இந்த மனசுதாங்க கடவுள்.. மகனின் ஆசிரியரிடம் 500 கேட்ட பெண்.. கிடைத்த 51 லட்சம் நிதி உதவி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் ஒருவர் தனது மகனின் ஆசிரியரிடம் உணவுக்காக ரூ.500 கடனாக கேட்டுள்ளார். அந்த பெண்ணின் வறுமையை உணர்ந்த ஆசிரியர் அந்த மாணவனின் தாய்க்கு உதவுவதற்காக கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி ரூபாய் 51 லட்சம் உதவி அளித்துள்ள சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

இந்த உலகில் மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதற்கு உதாரணமாக அவ்வப்போது சில நெகிழ்ச்சிமிக்க சம்பங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

முன் பின் தெரியாத நபர்களுக்கு கூட ஆபத்தில் உதவி செய்து தங்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமையும்.

51 லட்ச ரூபாய் நிதி உதவி

51 லட்ச ரூபாய் நிதி உதவி

அதேபோன்ற ஒரு சம்பவம்தான் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது. தனது பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவனின் தாயார், உணவுக்காக ரூ. 500 கேட்கவே அவருக்கு 51 லட்ச ரூபாய் நிதி உதவி திரட்டிகொடுத்து நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்.. நெகிழ்ச்சியூட்டும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சுபத்ரா. இவரது கணவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உயிரிழந்து விட்டார்.

உணவுக்கே கஷ்டப்படும் நிலை

உணவுக்கே கஷ்டப்படும் நிலை

கணவரின் திடீர் உயிரிழப்பால் தனது மூன்று பிள்ளைகளையும் வைத்து தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடும் சிரமப்பட்டு வந்தார். உணவுக்கே கஷ்டப்படும் நிலை கூட அவருக்கு வந்தது. அப்படித்தான் ஒருநாள் தனது மகன் அபிஷேக்கின் ஆசிரியரிடம் உணவுக்காக ரூ.500 கடனாக தாருங்கள் என்று சுபத்ரா கேட்டுள்ளார். சுபத்ராவின் நிலையை அறிந்து ஆசிரியர் கிரிஷா ஹரிஷ்குமார்.. அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று நினைத்துள்ளார்.

கிரவுட் ஃபண்டிங் முறையில்

கிரவுட் ஃபண்டிங் முறையில்

அவரது வறுமை நிலையை போக்கும் வகையில் பெரிய அளவில் உதவி செய்ய திட்டமிட்ட கிரிஷா ஹரிகுமார், இதற்காக தனது சமூக வலைத்தளத்தில், சுபத்ராவின் சூழ்நிலையை குறிப்பிட்டு அவருக்கு உதவி அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பதிவிட்டார். சமூக வலைத்தளத்தில் கிரவுட் ஃபண்டிங் (நிதி திரட்டுதல்) முறையில் நிதி உதவி கோரியிருந்தார். சுபத்ராவின் வங்கிக் கணக்கு எண்ணையும் பதிவிட்டு இருந்தார். நேரடியாக அவருக்கே உதவி போய் சேரும் என்பதற்காக கிரிஜா ஹரிகுமார் இப்படி செய்து இருந்தார்.

500 ரூபாய் கேட்டார்

500 ரூபாய் கேட்டார்

கிரிஜா ஹரிகுமாரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. சுபத்ராவின் பரிதாப நிலையை உணர்ந்த பலரும் அவருக்கு உதவ முன்வந்தனர். இதனால், வெறும் 2 நாட்களில் ரூ.51 லட்சம் நிதி திரண்டது. இது குறித்து கிரிஜா ஹரிகுமார் கூறுகையில், "என்னிடம் சுபத்ரா 500 ரூபாய் கேட்டார். நான் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று கூறினேன். அவரது வீட்டிற்கு சென்று பார்த்தேன். மிக கடுமையான வறுமையில் வாடியதை காண முடிந்தது. சமையல் அறையில் சிறிதளவு தானியங்கள் மட்டுமே இருந்தன. குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு கூட எதுவும் இல்லை.

 வங்கியில் டெபாசிட் செய்து கொடுக்க திட்டம்

வங்கியில் டெபாசிட் செய்து கொடுக்க திட்டம்

இனிமேல் அந்தப் பெண் தனது குழந்தைக்கு உணவு அளிப்பதற்காக யாரிடமும் கையேந்தக் கூடாது.. பாதியில் இருக்கும் அவரது வீடு கட்டப்பட வேண்டும் என்ற இரண்டு நோக்கங்கள் மட்டுமே எனக்கு இருந்தன. இதற்காகத்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது நன்றியை உதவி அளித்த அனைவருக்கும் எப்படி கூறுவது என்றே எனக்கு தெரியவில்லை. தற்போது கிடைத்துள்ள பணத்தில் வீட்டை கட்டி முடிக்க பயன்படுத்தி விட்டு.. மீதமுள்ள தொகையை வங்கியில் டெபாசிட் செய்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+