காதலனை கொன்ற.. கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்த பிறகு பேனா முனையை உடைத்த நீதிபதி!
திருவனந்தபுரம்: கேரளாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், நீதிபதிகள் தங்கள் பேனாவின் நுனியை உடைக்கும் பழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. நேற்று ஷாரோன் ராஜ் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் காதலியான, கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அப்போது நீதிபதி தனது பேனா முனையை உடைத்தார்.
இந்த பாரம்பரியம் கேரள நீதித்துறையில் ஆழமாக வேரூன்றி உள்ளது. நீதிபதி கே.கேமல் பாஷா, தனது பதவிக் காலத்தில் 13 கொலை வழக்குகளில் 14 பேருக்கு மரண தண்டனை விதித்தவராகும். அவரும் இந்த வழக்கத்தைப் பின்பற்றினார். 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தலச்சேரியில் கே.டி. ஜெயகிருஷ்ணன் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தார், நீதிபதி கே.கே. சந்திரதாஸ். அப்போதும், தீர்ப்பு எழுதிய தனது பேனாவின் நுனியை உடைத்தார்.

அதேபோல், 2024 நவம்பரில், எர்ணாகுளத்தில் 5 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக அசாஃபக் ஆலம் என்பவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி கே. சோமன், பேனா முனையை உடைத்துவிட்டு கோர்டை விட்டு வெளியே கிளம்பினார்.
நீதிபதி ஏ.எம். பஷீர் உட்பட பல நீதிபதிகள் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இது மரண தண்டனையின் தீவிரத்தை குறிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. பேனாவின் நுனியை உடைப்பதன் மூலம், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் தாக்கத்தை குறியீட்டாக வெளிப்படுத்துகிறார்கள். ஒரு குற்றவாளியின் விதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்த பேனா, இனிமேல் பயன்படுத்தப்பட கூடாது. அதற்கான சூழ்நிலை இந்த சமூகத்திற்கு வரக்கூடாது என்று நீதிபதிகள் இதைச் செய்கிறார்கள்.
இந்த பேனா முனை உடைப்பு மரபு என்பது, மரண தண்டனை இத்தோடு நிற்கட்டும், இனியும் விதிக்க வைக்கும் அளவுக்கு குற்றங்கள் நடக்க கூடாது என்பதை உணர்த்துகிறது. கேரளாவில் மரண தண்டனை எதிர்நோக்கி இருக்கும் 35வது நபர் கிரீஷ்மா ஆகும். 1991ல் கடைசியாக அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மற்ற மரண தண்டனை குற்றவாளிகள் இன்னும் தூக்கில்போடப்படவில்லை.
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications