ஹைதராபாத் ஓட்டல்.. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்து அத்துமீறிய இயக்குனர்.. இளம் நடிகை புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான 'ப்ரோ டாடி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மன்சூர் ரஷீத் என்பவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவருக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் மீது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளம் நடிகை கேரளா சென்று புகார் அளித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை அங்குள்ள முன்னணி நடிகரின் ஏற்பாட்டின் பேரில், காரில் கடத்தப்பட்டு, பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டும் என்று கோரி நடிகைகள் கோரிக்கை வைத்தனர்.

hema committee report malayalam cinema

இதையடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சகுமாரி ஆகியோரை கொண்ட கமிஷனை கேரள அரசு அமைத்தது.

இந்த கமிஷனில் பல நடிகைகள் புகார் அளித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்தது. சமீபத்தில் அந்த அறிக்கை அண்மையில் தான் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் பலர் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாகவும், வாய்ப்புகள் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதில் பல முன்னணி நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் மலையாள சினிமா உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சூழலில் நடிகர் ஜெயசூர்யா உள்பட முன்னணி நடிகர்கள் மீது நடிகைகள் தெரிவித்த புகாரின் பேரில் வழக்குகள் பாய்ந்து வருகிறது

இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான 'ப்ரோ டாடி' படத்தில் உதவி இயக்குனராக மன்சூர் ரஷீத் என்பவர் பணியாற்றினார்.. இவர் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் இதவரை நடவடிக்கை எடுக்கவில்லை..

இது தொடர்பாக இளம் நடிகை கூறுகையில், கடந்த 2021-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் திருமண காட்சியில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதன் பிறகு அந்த படத்தின் உதவி இயக்குனரான மன்சூர் ரஷீத் என்னை அணுகி கூடுதல் காட்சிகளில் நடிக்க வைப்பதாக தெரிவித்தார், அவர் அப்படி கூறியதால், அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினேன். அப்படி தங்கியிருந்த போது, ஒருநாள் என்னுடைய அறைக்கு உதவி இயக்குனர் மன்சூர் ரஷீத் வந்தார். அங்கு எனக்கு குடிப்பதற்கு குளிர்பானம் ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன் பிறகு நான் மயங்கி விட்டேன். அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இருந்ததால் மயங்கிவிட்டேன்.

மயக்கம் தெளிந்த பிறகு தான் அவர் என்னை பலாத்காரம் செய்தது எனக்கு தெரிய வந்தது. அத்துடன் அவர் என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்தார். அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் அவரிடம் இதுவரை ரூ.6 லட்சத்தை இழந்தேன். இதுதொடர்பாக ஏற்கனவே ஹைதரபாத் போலீசில் புகார் செய்தேன். இதையடுத்து ஹைதராபாத் போலீசார் அவரை தேடி கொல்லம் ஒச்சிரையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்கள். ஆனால், மன்சூர் ரஷீத் அதன்பிறகு தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவத்திற்குப் பின்னரும் அவர் பல படங்களில் உதவி இயக்குனராக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலரிடம் நான் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவிடமும் புகார் அளித்திருக்கிறேன். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" இவ்வாறு அந்த நடிகை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+