கேரளாவில் அஸ்வதியின் ஆட்டம்.. மனைவியை இழந்த வயசானவங்கதான் குறி.. திடுக்கிடும் தகவல்
திருவனந்தபுரம்: மனைவியை இழந்த வயதானவர்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி மோசடி செய்து வந்த பெண்ணை கேரள போலீசார் கைது செய்தனர். கடைசியாக ஒரு முதியவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த போது அந்த பெண் சிக்கியிருக்கிறார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் 66 வயதாகும் சங்கரன், ஒரு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருந்திருக்கிறார். இவருடைய மகள் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டதால், சங்கரன் தனது மகளையும், தன்னையும் கவனித்துக்கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

இதற்காக தன்னுடைய நண்பர் மோகன் என்பவரிடம் கூறினார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளவும் தயார் என்று சங்கரன் கூறியிருக்கிறார்.
இதையடுத்து மோகன் நூரநாடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி அப்பு என்ற அஸ்வதி (39) என்ற பெண்ணை சங்கரன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அப்போது அஸ்வதி தனக்கு கடன் இருப்பதாகவும், அதனை உடனே கட்டவேண்டும் என்று கூறி ரூ.40 ஆயிரம் கேட்டிருக்கிறார். சங்கரனும் அந்த பணத்தை கொடுத்திருக்கிறாராம்.
பின்னர் அஸ்வதி சங்கரன் வீட்டில் தங்கியிருந்து அவரது மகளை கவனித்துக்கொண்டு, வீட்டு வேலையும் செய்து வந்தார். சில நாட்களுக்கு பின்னர் அஸ்வதி சங்கரனிடம் திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால் தன்னுடைய கடன் 60 ஆயிரம் இருக்கிறது , அதை அடைத்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி மேலும் ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார். அந்த பணத்தையும் சங்கரன் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அஸ்வதி, சங்கரனிடம் தனது ஆதார்காடு உள்ளிட்ட ஆவணங்களை வீட்டுக்கு போய் எடுத்து வருவதாக கூறி போய் இருக்கிறார். ஆனால் அஸ்வதி போனவர் போனது தான், திரும்பி வரவே இல்லை. அப்போது தான் சங்கரனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து முதியவர் சங்கரன் கொல்லம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இந்நிலையில் கொல்லம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அஸ்வதியை கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் கூறும் போது, கொல்லத்தை சேர்ந்த அஸ்வதி, மனைவியை இழந்தவர்களை குறித்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
வசதியானவர்கள் என்றால் அதற்கு தகுந்தார்போல உடை, பாவனைகளை மாடனாக மாற்றிக்கொள்வார். சில இடங்களில் சேலை, சுடிதார் என்று குடும்ப பெண்ணாக நடந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அஸ்வதி வலையில் பலர் சிக்கியுள்ளனர். இதில் ஒருசிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். மற்றவர்கள் குடும்ப நலன் கருதி புகார் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications