திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் அசுர பலத்துடன் வென்று ஆட்சியை தக்க வைக்கும் இடசாரிகள்.. இந்தியா டுடே கணிப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பெரும்பலான இடங்களில் இடதுசாரிகளே வென்று ஆட்சியமைப்பார்கள் என தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கணிப்புகள் கூறியிருந்தன.

The Left Democratic Front again win kerala assembly election 2021: India Today

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அதே முடிவைத்தான் சொல்லியுள்ளன. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அசுர பலத்துடன் கேரளாவில் ஆட்சியை தக்கவைப்பார்கள் என்று கணிப்புகள் கூறுகின்றன,

அதாவது மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி: 104-120 இடங்கள் பெறும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்புகேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி 20-36 இடங்களில் வெல்லும் என கணித்துள்ளது இந்தியா டுடே. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 0-2 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும். இதர கட்சிகள் 0-2 இடங்களில் வெல்ல வாயப்பு என இந்தியா டுடே கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஏபிசி, சிவோட்டர்ஸ் மற்றும் ரிபப்ளிக் டிவி நடத்திய கணிப்புகளிலும் இடதுசாரிகளே ஆட்சியை தக்க வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
India Today- Axis - My India polls said that The Left Democratic Front likely win 104-120 seats out of 140 seats in kerala assembly election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X