மகர விளக்கு கால பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை சாத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்வாய்ந்த கோயிலாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் மாலை அணிந்து பயபக்தியோடு கடும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும்.

நடப்பு ஆண்டில் சபரிமலை மண்டல பூஜை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது பக்தர்கள் காடுகள், சாலைகள், சபரிமலை பாதை என ஒவ்வொரு பகுதியிலும் 24 முதல் 36 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இச்சம்பவத்துகக்கு பல்வேறு மாநில அரசுகளும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் இந்த ஆண்டு தீவிரப் படுத்தப்பட்டன.
18 ஆம் படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றும் பணிக்கு காவலர்கள் அமர்த்தப்பட்டனர். இதற்காக பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களிடமிருந்து இதுவரை எந்தவொரு புகாரும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை சாத்தப்பட்டது. அன்று இரவு 10 மணியளவில் ஹரிவராஸனம் பாடல் ஒலிக்கப்பட்டு, கோயில் நடை அடைக்கப்பட்டது. மண்டல காலமான கடந்த 41 நாள்களில் சுமாா் 37.29 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.
கடந்த ஆண்டைவிட நான்கரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மகர விளக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டு, சன்னிதான சுற்றுப்புறங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பூஜைகளுக்கு தேவையான அனைத்து பொருள்களும் சன்னிதானம் கொண்டுவரப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் அரவணை பிரசாதம் கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜைகளுக்கான இன்று மாலை 5:00 மணியளவில் நடை திறக்கப்படவுள்ளது. மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபத்தை ஏற்றவுள்ளார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து, கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 14 ஆம் தேதி மகர ஜோதி பெருவிழா நடைபெறுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications