மனசு லேசானவங்க இதை படிக்காதீங்க! படத்தில் கூட பார்க்க முடியாது.. நரபலி தந்த கேரளா சைக்கோவின் பின்னணி
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு நரபலிகளை செய்த 52 வயது முகமது சாபி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இந்த நரபலி பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்மம் மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும்தான் சாபி என்ற இளைஞரால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். இதில் பத்மம் கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்மம் தமிழ் பெண் ஆவார்!
இந்த நிலையில் கேரளாவில் இரண்டு நரபலிகளை செய்த 52 வயது முகமது சாபி குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. நீங்கள் லேசான மனசுக்காரர் என்றால் மேற்கொண்டு இவரை பற்றி படிக்க வேண்டாம்!
சாபியை செல்லமாக ரஷீத் என்று அவரின் நண்பர்கள் அழைத்து வந்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருக்கும் பெரும்பாவூர் பகுதியில் இவர் வசித்து வந்துள்ளார். இவர் வெறும் 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் 3 வயது பெண் பேர குழந்தை ஒருவரும் உள்ளார். சினிமாவில் காட்டப்படும் சைக்கோக்களை விட மோசமான குணம் கொண்டவர் இவர் என்று போலீசார் விளக்கி உள்ளனர்.

சினிமாவில் பொதுவாக சைக்கோ கில்லர்கள் எப்போதும் கொலை, வன்புணர்வு இதை பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படித்தான் இவரும் கூட எப்போது கொலை, ரத்தம் இதை பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு அனுபவத்திற்காக.. 75 வயது பெண்ணை கூட இவர் வன்புணர்வு செய்து இருக்கிறாராம்.
2020ல் 75 வயது பெண்ணை வன்புணர்வு செய்த இவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில்.. சும்மா ஒரு அனுபவத்திற்காக செய்தேன் என்று கூறி இருக்கிறார். அப்போது இவர் லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். சாலையில் சென்ற 75 வயது பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்துள்ளார்.
அதோடு விடாமல் அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களில் கத்தியை வைத்து கிழித்து உள்ளார். தற்போது நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும் இதே போல அந்தரங்க உறுப்புகளில் கீறல்கள் இருந்துள்ளன. பொதுவாக சைக்கோ கொலைகாரர்கள் ஒரே மாதிரியான கொலை முறைகளை பின்பற்றுவார்கள். அப்படித்தான் இவரும் கூட பெண்களின் அந்தரங்க உறுப்புகளை அறுக்கும் வழக்கத்தை வைத்து இருந்துள்ளார்.
பெண்களிடம் நட்பாக பழகுவது, அன்பாக பேசுவது, அதன்பின் அவர்களை கடத்தி கொலை செய்வதே இவரின் ஸ்டைல். இப்போது கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களும் பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் கடந்த 3 வருடமாக சாபி நட்பாக பழகி வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சாபி இந்த கொலைகளை பணத்திற்காக செய்ததாகவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இவரிடம் வங்கி கணக்கு எதுவுமே இல்லை. அதேபோல் இவரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி என்றால் கொலை செய்யும் திருப்திக்காக மட்டுமே இவர் இந்த குற்றங்களை செய்து வந்துள்ளார்.

இவருக்கு இருந்த இரண்டு பழக்கங்களில் ஒன்று குடிப்பது. தினமும் மூச்சு முட்ட குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளார். அதேபோல் பேஸ்புக்கில் பலரிடம் பேசுவது. பேஸ்புக்கில் எந்நேரமும் இருக்கும் இவர் அதன் மூலம் பல நண்பர்களை பிடித்து உள்ளார். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் இவர் நெருக்கமானது கூட இதே பேஸ்புக் மூலம்தான் . பேஸ்புக்கில் ஒரு பொய்யான கணக்கை உருவாக்கி அதன் மூலம் இவர் பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார்.
ஸ்ரீதேவி என்ற பெண்ணின் புகைப்படத்தை வைத்து.. பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார். எனக்கு சாபி என்ற நபரை தெரியும். அவர் பெரிய சாமியார். அவர் நரபலி கொடுப்பார். அவரிடம் சென்று பின் என் பணக்கஷ்டம் எல்லாம் போய்விட்டது என்று ஸ்ரீதேவி என்ற பேக் ஐடி மூலம் பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார். இதை நம்பி அவர்கள் சாபி போன் நம்பரை வாங்கி பேசி உள்ளனர்.
இதன் மூலம்தான் பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் சாபி நட்பாகி இருக்கிறார். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்கு சாபிதான் ஸ்ரீதேவி என்பதே இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும். போலீஸ் விசாரணையின் போது ஸ்ரீ தேவி என்பதே சாபியின் பேக் ஐடிதான் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். அப்போதுதான் இந்த உண்மையே பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்கு தெரிந்து உள்ளது.
போலீஸ் கைது செய்யும் கடைசி நிமிடம் வரை கூட சாபியின் திருட்டுத்தனம் நிற்கவில்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். அந்த 2 பெண்களை கடத்திய ஸ்கார்பியோ காரை நான் ஒட்டவே இல்லை. அதை என் நண்பன் முகமது பிலால் என்பவர்தான் வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார் என்றும் கூட சாபி போலீசில் பொய் சொல்லி, போலீசை திசை திருப்பி இருக்கிறார்.

ஆனால் சிசிடிவியில் தோன்றிய உருவத்தை வைத்து பெண்களை கடத்தியது சாபிதான் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். நரபலியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடலும் நேற்று முதல்நாள் மீட்கப்பட்டது.
கொலைக்கு முன்பாக இவர்கள் டார்ச்சர் செய்யப்பட்டு உள்ளனர். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதில் சாம்பல் தடவி பூஜை செய்துள்ளனர்,.மொத்தம் 56 துண்டுகளாக ஒவ்வொரு உடலையும் வெட்டி உள்ளனர். இதில் அந்தரங்க உறுப்பையும் தனியாக வெட்டி எடுத்துள்ளனர். இதனை சாபி தனியாக செய்துள்ளார் . பகவான் சிங் அவரின் மனைவி லைலா ஆகியோர் பார்க்கும் விதமாக சாபி இதை செய்துள்ளார். பின்னர் உடல்களுக்கு பூஜை போட்டுள்ளார்.
பூஜை முடிந்ததும் அந்த உடல் பாகங்களை அவர் சாப்பிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications