திருவனந்தபுரம் அருகே கணவருக்கு மாணவியை விருந்தாக்கிய இளம்பெண்.. இருவரையும் சிக்க வைத்த ஆசிரியை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கணவருக்கு மாணவியை விருந்தாக்கிய இளம்பெண் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை கண்டுபிடித்த கணவன், மனைவியிடம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், சிறுமியை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த மனைவி, 15 வயது சிறுமியை ஏமாற்றியதுடன், கணவருக்கு விருந்தாக்கியுள்ளார். இருவரும் கைதாகி உள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவு என்பது ஆண் அல்லது பெண் எனஇருவருக்குமே கத்தி மேல் நடப்பது போல் தான். என்றாவது ஒரு நாள் தங்கள் துணைக்கு தெரிய வரும் போது, பூகம்பமே வெடிக்கிறது. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கையும் களவுமாக பிடித்து அடிக்கிறார்கள். இது குடும்ப விவகாரம் என்பதால் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

அடிதடி மற்றும் பெரிய பிரச்சனை என்றால் மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். அதேநேரம் திருமணத்தை மீறிய உறவு வெளியில் உள்ளவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து மிரட்டுபவர்களை பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொடுப்பதும் உண்டு. இங்கு திருமணத்தை மீறிய உறவை அறிந்த கணவனுக்கு அவரது மனைவியே 15 வயது மாணவியை விருந்தாக அனுப்பி வைத்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் சரத் என்பவருடைய மனைவி நந்தா (24). இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்கள். சந்தோஷமாக செல்ல வேண்டிய வாழ்க்கையில் திருமணத்தை மீறிய உறவால் சிக்கல் ஏற்பட்டத. நந்தாவுக்கும், வேறு ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை ஒரு கட்டத்தில் அறிந்த சரத், நந்தாவை திட்டியதுடன், சேர்ந்து வாழ முடியாது பிரிந்துவிடலாம் என்று மிரட்டி வந்துள்ளார்.
அதேநேரம் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் ஒரு சிறுமியிடம் நான் உல்லாசமாக இருக்க நீ ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசையை மனைவியிடம் வெளிப்படுத்தி உள்ளார. முதலில் இதற்கு முடியாது என்று சொன்ன நந்தா, கணவர் மிரட்டியதால் வேறுவழியின்றி இதற்கு சம்மதம் தெரிவித்தாராம். அதன்படி நந்தா, 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கணவருடன் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை பயன்படுத்திய சரத், அந்த சிறுமியை சில வருடமாக அவ்வப்போது அழைத்து அத்துமீறி வந்துள்ளார் .
10ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியின் நடத்தையில் அங்கு பணியாற்றும் ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்த போது, தன்னை சரத் என்பவர் தன்னிடம் அடிக்கடி அத்துமீறியது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து ஆற்றிங்கல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சரத், நந்தா ஆகியோரை கைது செய்தார்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications