Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவனந்தபுரத்தை விடுங்க.. கேரளாவில் மற்ற இடங்களில் புஸ்வானமான பாஜக.. இந்த டேட்டாவை பாருங்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. 45 ஆண்டு காலத்திற்கு பிறகு முதல் முறையாக பாஜக இங்கு வெற்றி பெற்றாலும், திருவனந்தபுரத்தை தவிர்த்து மற்ற இடங்களை பார்த்தால் இன்னும் கேரளா பாஜகவுக்கு எட்டாக்கனியாக இருப்பதை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கேரளாவில் கால் பதிக்க வேண்டும் என்ற பாஜகவின் ஆசை பல வருட காத்திருப்புக்கு பிறகு கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நிறைவேறியது.

thiruvananthapuram-success-limited-kerala-footprint-bjp-local-body-story

45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறை

ஆனாலும், மாநிலத் தேர்தல்களில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் மாறி மாறித்தான் ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இது தான் வரலாறு. அந்த வகையில், நேற்று வெளியான உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் ஆளும் கூட்டணிக்கு எதிராகவே அமைந்துள்ளன. அதாவது, காங்கிரஸ் மீண்டும் அந்த மாநிலத்தில் எழுச்சி பெற்றுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 6 மாநகராட்சிகளில் கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியை மட்டும் பெரும் பாடுபட்டு தக்க வைத்துள்ளது. அதேநேரத்தில், 45 ஆண்டு காலத்திற்கு பிறகு முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.

மற்ற வார்டுகளில் பாஜக நிலைமை

மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றி மேயர் பதவியை பாஜக தன் வசப்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தை கைப்பற்றினாலும் உண்மையில் பிற வார்டுகளில் பாஜகவின் நம்பர்களை பார்த்தால் அந்த கட்சி இன்னும் பரிதாபகரமான நிலையிலேயே இருப்பதையே காண முடிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி 1,919 வார்டுகளில் வென்றுள்ளது. இதில் பெரும்பாலும் பாஜகதான் வென்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரத் தர்மா ஜனசேனா கட்சி வெறும் 5 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. 4 பஞ்சாயத்துகளை கைப்பற்றியுள்ளது.

346-இல் பாஜக ஒரு இடம் கூட இல்லை

கார்ப்பரேஷன் வார்டுகள் என்று எடுத்துக்கொண்டால் பாஜக 93 இடங்களில் வென்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் மட்டும் 50 வார்டுகளில் வென்றுள்ளது. 346 பஞ்சாயத்து வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. பாஜக இந்த பஞ்சாயத்து வார்டுகளில் மோசமான தோல்வியை வார்டு அளவில் பெற்று இருப்பது, அக்கட்சிக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது.

கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. கிராமம் மற்றும் நகராட்சி வார்டுகளை போன்று பஞ்சாயத்து வார்டுகள் பெரும்பாலும் சட்டமன்ற தேர்தல் டிரெண்டை போலவே கடந்த காலங்களில் அமைந்துள்ளன.

பாஜகவுக்கு எட்டாக்கனியாக கேரளா?

எனவே, இந்த இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி பின்னடைவை சந்தித்து இருப்பது, ஊரக அளவில் அந்த கட்சியால் தடம் பிடிப்பதில் இன்னும் கடும் சவால் காத்திருக்கிறது என்பதேயே காட்டுவதாக உள்ளது. மாநில அளவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்) ஆதிக்கத்தைத் தக்கவைத்தது.

காங்கிரஸ் 7,816 வார்டுகளும், சிபிஎம் 7,454 வார்டுகளும் வென்றுள்ளன. யு.டி.எப்-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) 2,844 வார்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) 1,018 வார்டுகளும் பெற்று முக்கியச் சக்திகளாக உள்ளன. திருவனந்தபுரம் வெற்றியை தவிர்த்து விட்டு பார்த்தால் பாஜகவிற்கு இன்னும் கடவுள் தேசம் எட்டாக்கனியாகவே இருக்கிறதோ என்ற அளவில்தான் தரவுகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+