காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சிலருக்கு எவ்வளவு படித்தாலும் அறிவு வராது என்பார்களே.. அதற்கு மிகப் பொருத்தமான ஒரு பகீர் சம்பவம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து, ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் 26 வயது ஐடி இளைஞர் ஒருவர், தன் வீட்டு பெட் ரூமிலேயே கஞ்சா தோட்டம் வளர்த்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான விஷால் என்ற அந்த இளைஞர், கடந்த ஒரு வருடமாகத் திருவனந்தபுரத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஆலத்தரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்தார். அவர் வசித்த வீட்டின் ஒரு பெட் ரூமை முழுமையாக ஏர்-கண்டிஷன் செய்து, அதற்குள் விளக்குகள் அமைத்து, வெளியாட்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் மிக ரகசியமாகச் சுமார் 70 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார்.

Kerala crime

கஞ்சா தோட்டம்

இது குறித்து ரகசியத் தகவல் அறிந்த ஸ்ரீகாரியம் போலீசார், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டபோது ஒட்டுமொத்தக் கஞ்சா தோட்டமும் வெளிச்சத்திற்கு வந்தது. தனது சொந்த உபயோகத்திற்காகவே இந்தச் செடிகளை அவர் வளர்த்து வந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் வீட்டுக்குள் புகுந்து பல மணி நேரம் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, விஷால் பயத்திலும் மன அழுத்தத்திலும் மொத்தமாகச் சோர்ந்து போய், மிகவும் மனச்சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். காலையிலிருந்து அவர் எதுவும் சாப்பிடவில்லை. இதைப் பார்த்த போலீசார், மனிதாபிமான அடிப்படையில் அவரிடம் கொஞ்சம் பலகாரம் அல்லது ஏதேனும் சாப்பிடுமாறு கூறியுள்ளனர்.

பால்

உடனே விஷால், தனது பிரிட்ஜில் வைத்திருந்த ஒரு லிட்டர் பச்சை பால் பாட்டிலை எடுத்து, எதைக் குறித்தும் கவலைப்படாமல் ஒரே மூச்சில் முழுமையாகக் குடித்து முடித்துள்ளார். அதைக் குடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அதுவரை சோர்ந்து கிடந்த விஷாலின் உடலில் திடீரென ஒரு புது எனர்ஜி வந்து, அவர் பழைய நிலைக்குத் திரும்பியதைக் கண்டு சோதனையிட வந்த போலீசாரே ஒரு நிமிடம் வாயடைத்துப் போயுள்ளனர்.

விஷால் ஒரே மூச்சில் பால் குடித்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்த போலீசார், வீட்டைத் தீவிரமாகத் தேடியபோது அங்கே ஏகப்பட்ட காலி பால் பாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்த போதுதான், போலீசாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கஞ்சா சட்னி

தினமும் அதிகாலையில் கஞ்சாவை நன்றாக அரைத்து பேஸ்ட் போலச் செய்து, அதனை ஜில்லென்று இருக்கும் பாலில் கலந்து குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக போலீசாரிடம் சொல்லி விஷால் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கஞ்சா செடியில் இருக்கும் மென்மையான இளம் இலைகளைப் பறித்து, அதனை வைத்து கஞ்சா சட்னி தயாரித்துச் சாப்பிட்டு வந்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பரபரப்பு

ஆண்டுக்கு 20 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஐடி மேலாளர், கஞ்சா பாலும் கஞ்சா சட்னியும் சாப்பிட்டு, வீட்டுக்குள்ளேயே தோட்டம் வளர்த்து போலீசாரிடம் சிக்கியிருக்கும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலைக் கைது செய்த போலீசார், அவர் பின்னால் வேறு ஏதேனும் நெட்வொர்க் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+