நெஞ்சே பதறுதே.. பார்த்தவர்களை உடைத்து போட்ட வயநாடு வீடியோ.. இது மாதிரி இன்னும் எத்தனை நடந்திருக்கோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வயநாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை உலுக்கி உள்ளது.

வயநாட்டில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. அங்கே இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர்.

wayanad landslide kerala

கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் 2 நாட்களுக்கு முன் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மீட்பு பணிகள்: வயநாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மீட்பு பணிகளின்போது பல உடல்கள் மீட்கப்படும் காட்சிகள், வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

2 நாட்களுக்கு பின்.. பலர் மண்ணுக்கு உள்ளே இருந்து உயிரோடு மீட்கப்படும் காட்சிகள் மக்கள் மனதை உலுக்கி உள்ளன. இந்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை உலுக்கி உள்ளது. அப்படித்தான் நேற்று வெளியான வீடியோ ஒன்று உள்ளது.

அங்கே நாய் ஒன்று 2 நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டு உள்ளது. மண்ணுக்குள் புதைந்து இருக்கும் நாய் உயிருக்கு போராடிய படியே குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. பெருங்குரலெடுத்து அந்த நாய் குறைக்கும் வீடியோ மக்கள் மனதை உலுக்கி ரணமாக்கி உள்ளது. முகம் முழுக்க சேறு இருக்க.. உடல் மண்ணுக்கு உள்ளே இருக்க அந்த நாய் கதறும் வீடியோ காட்சிகள் பார்க்கவே அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

வயநாட்டில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்?: வயநாடு மற்றும் கேரளாவில் மற்ற பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட சாயில் பைப்பிங் என்ற பிரச்சனைதான் காரணம். அதாவது மணல் குழாய். இப்போது மண்ணிற்கு கீழ் பைப் ஒன்றை வைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த பைப்பை சுற்றி இருக்கும் மண் பொதுவாக கொஞ்சம் வலிமை இழந்து இருக்கும்.

அதுவே இயற்கையாகவே மண்ணுக்கு அடியில் குழாய் போன்ற அமைப்பை தண்ணீர் மூலம் உருவாகிறது என்று வைத்துகொள்வோம். வலிமை இல்லாத மண் காரணமாக குழாய் போன்ற அமைப்பு மண்ணுக்கு கீழே தண்ணீர் மூலம் உருவாக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த தண்ணீர் அந்த மண்ணை மேலும் வலிமை இழக்க செய்து அதை சரிய செய்யும்.

இதுதான் கேரளாவில் நடக்கிறது. அங்கே இருக்கும் மண் வலிமை இன்றி இருக்கிறது. இப்படி மண் வலிமை இன்றி இருப்பதால் தானாக அங்கே மண் உள்ளே தண்ணீர் மூலம் சாயில் பைப் ஏற்படுத்தப்படுகிறது. இது பின்னர் மண் சரிய முக்கிய காரணமாக மாறி விடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+