கும்மிருட்டில்.. 4 பேரிடம் சிக்கிய லண்டன் பெண்.. கரெக்ட்டா வந்த சமையல்காரர்.. என்னாச்சுன்னு பாருங்க
சம்பவத்தின் போது ரிசார்ட்டின் சமையலளர் மீது கொடூர தாக்குதல் நடந்திருக்கிறது. இதனையடுத்து அவர் புகார் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரிட்டன் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது பாலியல் பலாத்கார தாக்குதல் முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாக்சி டிரைவர் அந்தோனிக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில், மறுமுனையில் பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேசியிருக்கிறார். அதில் தனது தந்தையை விமான நிலையத்தில் இறக்கிவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து இளம்பெண்ணின் தந்தையும் பிரிட்டன் புறப்பட்டு சென்றிருக்கிறார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்தோனி இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து மெஸேஜ்கள் அனுப்பி தொந்தரவு செய்திருக்கிறார்.
அதேபோல அடிக்கடி கால் செய்து மேலும் சில நாட்கள் இங்கு தங்கி சுற்றிப்பார்த்துவிட்டு லண்டனுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அப்பெண் அதனை மறுத்திருக்கிறார். தொடர்ந்து இப்படி தொந்தரவு செய்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த 31ம் தேதி இரவு பிரிட்டன் இளம்பெண் அருகில் உள்ள அடிமலத்துரா கடற்கரைக்கு சென்றிருக்கிறார். இதனையறிந்துக்கொண்ட டாக்ஸி டிரைவர் அந்தோனி தனது நண்பர்களை உடன் அழைத்துக்கொண்டு இளம்பெண்ணை பின்தொடர்ந்திருக்கிறார்.

பலாத்கார முயற்சி
அப்போது ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தை இளைம்பெண் கடக்க முயன்றபோது அந்தோனியும் அவரது நண்பர்களும் இப்பெண்ணை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் தங்களது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அப்பெண் இணங்கவில்லை. எனவே அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இச்சூழலில் நல்வாய்ப்பாக அந்த வழியாக இளம்பெண் தங்கியிருந்த ரிசார்ட்டின் சமையல்காரர் ஒருவர் வந்திருக்கிறார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவர் அந்தோனியையும் அவரின் கூட்டாளிகளையும் தடுக்க முயன்றிருக்கிறார்.

தாக்குதல்
இதனயைடுத்து அனைவரின் கவனமும் சமையல்காரரின் பக்கம் திரும்பியுள்ளது. அவரை இவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இளம்பெண் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து இளம்பெண் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால் சமையல்காரர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை மேற்கொள்கையில் சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து டாக்ஸி டிரைவர் அந்தோனியை கைது செய்துள்ளோம். அவரது நண்பர்கள் நான்கு பேரும் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர்" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு
அடிமலத்துரா கடற்கரை பகுதியில் இதேபோல அடிக்கடி பாலியல் பாலத்கார சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதனை தடுக்க இப்பகுதியில் காவல்துறையினரின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரிசார்ட் சமையல்காரர் கூறுகையில், "நான் என்னுடைய தனிமையான இரவுகளை கழிக்க பெரும்பாலும் கடற்கரைக்கு செல்வேன். சம்பவத்தன்றும் அதேபோல கடற்கரைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணை நான்பேர் சேர்ந்து ஏதொ செய்துக்கொண்டிருந்தனர்.

வாக்குமூலம்
அப்பெண் அலறிக்கொண்டிருந்தார். அருகே சென்று பார்த்தபோதுதான் அவர்கள் அப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. அவர்களிடம் அப்பெண்ணை விட்டுவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் என்னை சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டனர். இதில் நான் கடுமையாக காயமுற்றேன். அப்பெண் அங்கிருந்து தப்பிவிட்டாள். இதனையறிந்த அந்த கும்பலும் அங்கிருந்து தப்பிவிட்டது. நான் ரிசார்ட் சார்பில் புகார் அளித்தேன். ஆனால் காவல்துறையினர் புகாரை உடனடியாக பெற்றுக்கொள்ளவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின்னரே புகாரை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்" எனக்கூறியுள்ளார்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications