Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடர்ந்த காட்டுக்குள் மிஸ்ஸான 3 பெண்கள்.. திடீர்னு அசையாமல் எதிரே நின்ற உருவம்.. டக்னு திரும்பினால்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மாடு மேய்க்க போன 3 பெண்கள், அங்கிருந்த காட்டுக்குள் திடீரென காணாமல் போன சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கி எடுத்துவிட்டது.. யாரிந்த பெண்கள்? எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த பெண்களுக்கு நேற்று என்னதான் நடந்தது?

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துதான் குட்டம்புழா என்ற கிராமமாகும்.. இது கொச்சியிலிருந்து கிழக்கே 71 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.. இந்த கிராமத்தை ஒட்டியுள்ளதுதான் அத்திக்களம் என்ற வனப்பகுதி.. எனவே, இந்த கிராமம் முழுக்க அடர்ந்த காடுகளால் சூழப்பட்டதாகும்.. பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

kerala 3 women kuttampuzha forerst

அடர் வனப்பகுதி: எப்போது எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்த குட்டம்புழா கிராமம் தனித்தீவு போல காணப்படுமாம்.. குட்டம்புழாவை சேர்ந்த சிலர், ஆடு, மாடுகளை மேய்த்து வருகிறார்கள்.. இந்நிலையில், மாயா ஜெயன், பாருக்குட்டி, டார்லி ஆகிய மூன்று பெண்களின் மாடுகளும் நேற்றுமுன்தினம் மேய்ச்சலுக்கு சென்றிருக்கின்றன. ஆனால், அவைகள் திடீரென காணாமல் போய்விட்டன.. இதனால் பதறிப்போன 3 பெண்களும், தங்கள் மாடுகளை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

எங்கேயுமே மாடுகள் கிடைக்காததால் ஒருவேளை, அத்திக்களம் காட்டுக்குள் மாடுகள் நுழைந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் வனப்பகுதிக்குள் நேற்று மதியம், 3 மணிக்கு 3 பேருமே நுழைந்துள்ளனர். ஆனால், அதற்கு பிறகு இந்த 3 பெண்களும் அவரவர் வீட்டுக்கு திரும்பவில்லை.

பெண்கள் மாயம்: இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், 3 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் தெரிவித்துள்ளனர்... இதையடுத்து போலீசாரும், காணாமல் போன பெண்களை, காட்டுக்குள் தேட முடிவு செய்தனர். ஆனால், அத்திக்களம் காட்டுக்குள் நுழைந்து தேடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதால், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர், கலால் துறை, வனத்துறை அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் அடங்கிய மிகப்பெரிய அளவிலான குழுவை, இந்த தேடுதல் வேட்டையில் போலீசார் இறக்கினார்கள்.

மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை ஆரம்பமானது.. ஆனால், இதில் 2 குழுக்களால் தேடுதல் பணியை தொடர முடியவில்லை. எனவே அவர்கள் அதிகாலை 2 மணியளவில் பாதியிலிருந்தே காட்டிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்..

2 அணிகள்: இதனால் மற்ற 2 அணிகள் மட்டும் தேடுதல் வேட்டையை தொடர்ந்தன... தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர், கலால் துறை, வனத்துறை அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் என அத்தனை பேர் ஈடுபட்டும்கூட, 3 பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், அந்த 3 பெண்களில் ஒருவரிடமிருந்து போன் வந்துள்ளது.. இந்த போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டை தொடர்ந்தது.. அப்போதும் பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை..

யானைகள் நடமாட்டம் இந்த காட்டில் இருப்பதால் தேடுதல் பணி மிகவும் அபாயகரமானதாக மாறியது. வியாழக்கிழமை மதியம் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை, வனத் துறையினரின் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்தது. பிறகு, காட்டுக்குள் ஆளில்லா விமான சோதனை நடத்தப்பட்டது.. ட்ரோன் தவிர, தெர்மல் ஸ்கேனிங் கருவிகளையும் பயன்படுத்தி மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வனப்பகுதி: 3 பெண்கள் காட்டுக்குள் மாயமாகிவிட்டார்கள் என்றும், அவர்களை போலீசார் வனப்பகுதிக்குள்ளேயே நுழைந்து தீவிரமாக தேடி கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி, மாநிலம் முழுவதும் பரபரப்பை தந்துவிட்டன..

இந்த சூழலில் போலீசார் கூறும்போது, "நேற்று மாலை 3 மணியிலிருந்தே 3 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்.. அவர்களின் ஒரு பெண் மட்டுமே செல்போன் வைத்துள்ளார்.. எனவே, அந்த சிக்னலை வைத்து, ஆரம்பத்தில் அவரை தொடர்புகொள்ள முடிந்தது. ஆனால், அதற்கு பிறகு செல்போன் ரீச் ஆகவில்லை.. 3 பெண்களும், அடர்ந்த காட்டுக்குள் உள்ள பள்ளத்தாக்கு பாறையில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.. எப்படியும் அவர்களை கண்டுபிடித்து மீட்டுவிடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

பதற்றம்: போலீசார் இவ்வாறு உறுதி தந்தாலும், பகல் 3 மணிக்கே காணாமல் போனவர்கள், இரவு நேரத்தில் எப்படி கிடைப்பார்கள்? என்ற பதற்றம் கேரள மக்களை கவ்விக் கொண்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று காணாமல் போன 3 பெண்களும் இன்று காலை 7.30 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் 3 பேரும் காட்டுக்குள் 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அரக்கமுத்தி என்ற பகுதியில் இருந்தார்களாம். அங்குதான் போலீசார் இவர்களை கண்டுபிடித்துள்ளனர்.. காலை 8.30 மணியளவில் பெண்களை குட்டம்புழாவிற்கு அழைத்துவரப்பட்டனர்.

மாடுகள் மாயம்: கடந்த புதன்கிழமையன்று, இவர்களது மாடுகள் காட்டில் காணாமல் போய்விட்டதாம்.. அந்த மாடுகளை தேடி நேற்று காட்டுக்குள் சென்றார்களாம்.. அப்போது காட்டு யானைகளை அங்கு பார்த்ததுமே, பயந்து கொண்டு, வனப்பகுதிக்கு உள்ளேயே சென்றுவிட்டோம். இதனால் வழியை தவறவிட்டுவிட்டோம். பிறகுதான், அரக்கமுட்டியில் உள்ள பாறை நிலத்தில் யாராவது வந்து உதவுவார்கள் என்று காத்திருந்தோம்" என்று அச்சம் விலகாமல் சொல்கிறார்கள்.

காட்டுக்குள் காணாமல் போன பெண்களை தேடும் பணியில், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர், கலால் துறை, வனத்துறை அதிகாரிகள், உள்ளூர்வாசிகள், செல்போன் சிக்னல், ஆளில்லா விமான சோதனை, தெர்மல் ஸ்கேனிங் கருவிகளையும் பயன்படுத்தி தேடுதல் வேட்டை என அத்தனை முயற்சிகளும் ஒரே நாளில் ஈடுபடுத்தப்பட்டு, போலீசார் பெண்களை பத்திரமாக மீட்டிருப்பது, பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பரபரப்பு: அதாவது, வியாழக்கிழமை மாடுகளை தேடி காட்டுக்குள் சென்ற பெண்கள், வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுவிட்டார்கள். ஆனால், காணாமல் போன இவர்களின் மாடுகள், வியாழக்கிழமையே அவரவர் வீட்டுக்கு வந்துவிட்டதாம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+