பாம்பு.. பாம்பு! கூச்சலிட்ட நபர்.. பார்த்ததும் தெறித்து ஓடிய பயணிகள்! கேரள ரயிலில் பரபரப்பு சம்பவம்
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமூதின் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலில் ஒரு பெட்டிக்குள் பாம்பு புகுந்ததால், அங்கிருந்த பயணிகள் என்னது பாம்பா. . என்று அலறியடித்துக்கொண்டு ஓடியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று கூறுவர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படையப்பா படத்தில் கூட அந்த பாம்பு சீனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.
பாம்புக்கு பயப்படாதவர்கள் என இருப்பவர்கள் மிகவும் குறைவுதான். பலர் கூட்டமாக இருக்கும் இடத்தில் கூட திடீரென ஒரு பாம்பை கண்டால் அங்கிருந்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுவதை கூட பார்ப்பதுண்டு.

ஓடும் ரயிலில் பாம்பு
ஆனால் நம்மால் ஓட முடியாத ஒரு இடத்தில் பாம்பு வந்தால் என்ன செய்வோம். . என்று நினைத்து பார்த்தாலே மனதில் திக்..திக்.. தான். அதுபோல ஒரு திக் திக் நிமிடங்களை திருவனந்தபுரம்-நிசாமூதின் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் அனுபவித்துள்ளனர். ஆம். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நிசாமூதின் நோக்கி நிசாமூதின் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் பயணிகளும் செல்போனில் படம் பார்த்த படியும், ஒருசிலர் தூங்கிக்கொண்டும் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் பயணிகளின் உடைமைகளுக்கு இடையே ஒரு பாம்பு தென்பட்டது.

லக்கேஜ் அருகே பாம்பு
இதை முதலில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து பாம்பு.. பாம்பு.. என்ற கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டதும், அந்த பெட்டியில் படம் பார்த்து கொண்டிருந்தவர்களும், தூங்கிக்கொண்டிருந்தவர்களும் தடபுடலாக எழுந்து ஓடினர். அவர்கள் அலறியடித்து கொண்டு ஒருவருக்கு பின் ஒருவராக மறைந்துகொண்டனர். ரயிலுக்குள் பாம்பு புகுந்தது அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ரயிலின் எஸ் 5 பெட்டியில் கீழ் படுக்கைக்கு கீழே பயணிகள் வைத்திருந்த லக்கேஜ் அருகே தான் அந்த பாம்பு தென்பட்டுள்ளது. பாம்பு ஊர்வதை கண்ட பயணிகள் அலறியடித்து ஓடினர். ஓடும் ரயிலுக்குள் பாம்பு புகுந்ததால், பயணிகள் என்ன செய்வதன்று தெரியாமல் திகைத்தனர்.

உஷாரான ரயில்வே அதிகாரிகள்
இதையடுத்து உடனடியாக ரயில் பெட்டிக்குள் பாம்பு புகுந்த தகவல் குறித்து டிக்கெட் பரிசோதகருக்கு கூறப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் அருகில் உள்ள கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு சம்பவம் பற்றி தகவல் கொடுத்தார். இதையடுத்து உஷாரான ரயில்வே அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி, ரயில் இரவு10.15 மணியளவில் கோழிக்கோடு வந்ததும் நிறுத்தப்பட்டது. அங்கு ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பரபரப்பு
இதையடுத்து ரயில் நிலையத்தில் தயாராக இருந்த வனத்துறையினர், இரண்டு பாம்பு பிடிப்பவர்களுடன் வந்து ரயில் பெட்டியில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால், பாம்பு எங்கும் தென்படவில்லை. இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருந்த ஓட்டை வழியாக பாம்பு வெளியே ஓடியிருக்கலாம் அல்லது மறைந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இரு பெட்டிகளுக்கு இடையே இருந்த சிறிய துளை சீல் வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து பயணிகளும் ரயிலில் ஏறினர். இதைத்தொடர்ந்து ரயில் புறப்பட்டு சென்றது. ஓடும் ரயிலில் திடீரென நுழைந்த பாம்பு சில மணி நேரங்கள் ரயில் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டுச்சென்றது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications