வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏப்.9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் உள்ள 'டிவெண்டி20' எனும் அரசியல் கட்சி, வேட்பாளர்களை அறிவிப்பதில் சொதப்பியிருக்கிறது. இது பாஜக மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.
கேரளாவில் 'டிவெண்டி20' எனும் அரசியல் கட்சி இருக்கிறது. பெயர் கொஞ்சம் வித்தியாசமானதுதான். இருப்பினும் மக்கள் மத்தியில், இக்கட்சி நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

கவனம் பெற்ற கட்சி
இப்படி இருக்கையில், எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட ரெடியாகி வருகிறது. முன்னதாக, எர்ணாகுளம் மாவட்டத்தின் பெரம்பாவூர் தொகுதியில் நடிகை லட்சுமிபிரியாவும், ஏட்டுமானூர் தொகுதியில் நடிகை வீணா நாயரும் போட்டியிடுவார்கள் என்று கட்சி அறிவித்திருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு கேரளா முழுவதும் கவனம் பெற்றிருந்தது.
சொதப்பிய பிளான்
ஆனால், பிரச்சனை என்னவெனில், நடிகைகள் லட்சுமிபிரியா மற்றும் வீணா நாயரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. தமிழகத்தை போல கேரளாவிலும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் இருவரின் பெயரும் இல்லை. அதெப்படி திமிங்கலம், வாக்காளராக இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடியும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இப்படி ஒரு கட்சியை பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, தேர்தல்களை நகைப்புக்குள்ளாக்கி இருப்பதாக சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
பேக் அடித்த கட்சி
வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, அவர் வாக்காளர்தானா? என்பதை சரிபார்க்க தவறியது, டிவெண்டி20 கட்சியின் நிர்வாக திறன் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவசர அவசரமாக வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கின்றனர். உடல்நலக்குறைவு காரணமாகத்தான் வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார் என்று கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
மாற்று வேட்பாளர்கள்
இருப்பினும் கட்சியின் கண்மூடித்தனமான தவறை, பல்வேறு தரப்பினரும் கடுமையாக சாடி வருகின்றனர். லட்சுமிபிரியாவிற்குப் பதிலாக முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ஜிபி பாத்தியக்கல் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல ஏட்டுமானூர் தொகுதியிலும் மாற்று வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications