திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்யாண வீட்டில் எக்ஸ்ட்ரா அப்பளம் தரலைனு இத்தனை பெரிய சண்டையா?.. சேட்டன்ஸ் மோதல் வீடியோவால் பரபரப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த ஒரு திருமணத்தில் கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டதற்காக இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

Recommended Video

    கல்யாண வீட்டில் எக்ஸ்ட்ரா அப்பளம் தரலைனு இத்தனை பெரிய சண்டையா?.. சேட்டன்ஸ் மோதல் வீடியோவால் பரபரப்பு

    திருமணம் என்றால் பத்திரிகை போடுவதில் ஆரம்பித்து மறுவீடு வரை இரு வீட்டாருக்கும் இடையே சண்டை சச்சரவு குறைந்தபட்சம் மன கசப்பு, மன வேதனை இருப்பது வாடிக்கையான ஒரு விஷயமாகும்.

    குறிப்பாக உணவு பரிமாறும் இடத்தில் ஒரு சண்டை நடக்கும் பாருங்க. முதல் பந்தியில் இருந்த ஐட்டங்கள் இரண்டாவது பந்தியில் வரவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சினையாக்கி சிலர் குளிர் காய்வர்.

    திருமண மேடையில் புகழ் செய்த செயல் .. புகழ் எப்பவுமே இப்படித்தானா?? திருமண மேடையில் புகழ் செய்த செயல் .. புகழ் எப்பவுமே இப்படித்தானா??

     கேரளா

    கேரளா

    அது போல்தான் கேரளாவில் ஒரு திருமண வீட்டில் உணவு கூடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கேரளா மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் முட்டம் பகுதியையும் மணமகன் திருக்குன்றப்புழாவையும் சேர்ந்தவர்கள்.

    மாப்பிள்ளை

    மாப்பிள்ளை

    மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து மண்படத்தில் உள்ள உணவு கூடத்தில் விருந்து தொடங்கியது. அப்போது மாப்பிள்ளையின் தோழர்கள் எக்ஸ்ட்ரா அப்பளம் கேட்டதற்கு பந்தி பரிமாறுபவர் வைக்கவில்லை. இதனை ஒருவர் தட்டி கேட்டுள்ளார்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மாப்பிள்ளையோட பிரண்டு நானு எனக்கே அப்பளம் இல்லையா என கேட்ட போது மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்படடது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்தார்.

    வாக்குவாதம் முற்றியது

    வாக்குவாதம் முற்றியது

    இதை கண்ட பெண் வீட்டார் அந்த நண்பரை தட்டி கேட்டனர். இதனால் பிரச்சினை பெரிதாகி வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இப்படியே மாறி மாறி இரு தரப்பினரும் மோதி கொண்ட நிலையில் மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

    சிதறி ஓட்டம்

    சிதறி ஓட்டம்

    இந்த சம்பவத்தால் சாப்பிட வந்தவர்கள் சிதறி ஓடினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டினர். இதையடுத்து திருமண மண்டபத்தின் ஓனர் முரளிதரன் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நொறுக்கினா நொறுங்கும் அப்பளத்திற்கு இப்படியொரு சண்டையா என அந்த வீடியோவை பார்க்கும் நபர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English summary
    Two families dispute for extra papad in a marriage function in Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X