Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென பார்ட் பார்ட்டாக கழற்றப்படும் பிரிட்டன் போர் விமானம்.. கேரளா ஏர்போர்ட்டில் என்ன நடக்கிறது!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கிய பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35 போர் விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியாமல் பிரிட்டன் குழப்பத்தில் இருக்கிறது. இதற்கிடையே அந்த ஃபைட்டர் ஜெட்டை பார்ட் பார்ட்டாக பிரிக்கப் பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது.

கடந்த ஒரு மாதமாகவே ஏவியேஷன் துறைக்குப் போதாத காலம் போல.. அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து பல ஷாக் சம்பவங்கள் நடந்து வருகிறது.

UK to Dismantle Stranded F-35B Fighter Jet in Kerala for Transport Back Repair Efforts Fail

போர் விமானம்

அப்படித் தான் ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் ஏர்போரட்டில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35 போர் விமானம் திடீரென தரையிறங்கியது. எரிபொருள் சிக்கலால் முதலில் விமானம் தரையிறங்கியதாகச் சொல்லப்பட்டது. அதன் பிறகே ஹைட்ராலிங் அமைப்பில் சிக்கல் இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே ஜெட்டை பார்ட் பார்ட்டாக பிரித்து பிரிட்டன் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தாமதம்

முதலில் விமானத்தை திருவனந்தபுரத்திலேயே வைத்துப் பழுதுபார்க்கப் பலமுறை முயற்சிகள் நடந்தன. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாததால் விமானம் அங்கேயே இருக்கிறது. விமானத்தை மீண்டும் பறக்க வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. மேலும், பிரிட்டனில் இருந்து இதற்கான வல்லுநர் குழுவும் இதுவரை இந்தியாவிற்கு வரவில்லை. பழுதுகளை நீக்க 30 பொறியாளர்களைக் கொண்ட டீம் திருவனந்தபுரம் வர உள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால்,அவர்கள் இதுவரை இந்தியாவுக்கு வரவில்லை.

பார்ட் பார்ட்டாக கழற்றப்படும் விமானம்

இதனால் விமானம் எப்போது சரி செய்யப்படும் என்பதில் தெளிவல்லாத சூழலே இருக்கிறது. இதையடுத்து மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளில் பிரிட்டன் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். குறிப்பாக ராணுவப் சரக்கு விமானம் மூலம் விமானத்தைத் திருப்பி அனுப்ப ஆலோசித்து வருகிறார்கள். இருப்பினும், விமானத்தை அப்படியே முழுமையாக அனுப்ப முடியாது. இதனால் விமானத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து அதை அனுப்ப ஆலோசித்து வருகிறார்கள்.

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியான இந்த விமானம், கேரளக் கடற்கரையிலிருந்து 100 கடல் மைல் தூரத்தில் இருந்தது. அப்போது மோசமான வானிலை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக திருவனந்தபுரத்திற்கு அவசரமாகத் திருப்பப்பட்டது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இருப்பினும், போர் விமானம் மீண்டும் விமானம் தாங்கி போர்க் கப்பலுக்குத் திரும்பத் தயாராகும்போது ஹைட்ராலிக் செயலிழப்பு கண்டறியப்பட்டது.

பின்னணி

இதனால் ஜெட் விமானத்தைப் பாதுகாப்பாகக் கிளப்பவும் தரையிறங்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முதலில் மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்படச் சிறிய ராயல் கடற்படை குழு, சிக்கலைச் சரி செய்ய முயன்றனர்.. ஆனால், சிக்கலான பிரச்சினை என்பதால் அதைச் சரி செய்ய முடியவில்லை. இப்போது விமானம் மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் இருக்கிறது.

கேரளாவில் பருவமழை ஆரம்பிக்கிறது. இதனால் பாதுகாப்பாகத் தனது ஹேங்கரில் (பார்க் செய்யும் இடம்) நிறுத்த ஏர் இந்தியா நிறுவனம் முன்வந்தது. இருப்பினும், இந்த உதவியைப் பிரிட்டன் கடற்படை மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் விமானத்தை பார்ட் பார்ட்டாக கழற்றி எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+