நடிகர் மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மூச்சுத்திணறல், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி
திருவனந்தபும்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோகன்லால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். தனது அசாத்திய நடிப்புத்திறனால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழகத்திலும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 64- வயதான மோகன்லால் இன்று திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லாலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாச நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மோகன்லால் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மோகன்லாலுக்கு அதிக காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவருக்கு சுவாச தொற்று இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்கள் பொது நிகழ்ச்சியில் எதிலும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
எல் 2, எம்புரான் படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், முதல் முறையாக தான் இயக்கி இருக்கும் பர்ரோஸ் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக குஜராத்தில் இருந்து கொச்சிக்கு மோகன்லால் திரும்பினார். அப்போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோகன் லால் அனுமதிக்க்கப்பட்டார்.
தற்போது அவரது உடல் நலம் தேறி வருவது மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மலையாளம், தமிழ், கன்னட உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். தமிழில் இருவர், விஜய்யுடன் ஜில்லா, கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் மோகன்லால், முதல் முறையாக படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். 'பரோஸ்' என்ற படத்தை மோகன்லால் முதன் முதலாக இயக்கியுள்ளார். வாஸ்கோட காமாவின் பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications