கேரளாவில் முதல் பயணத்திலேயே ஷாக்.. வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழைநீர் கசிவு.. பயணிகள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த புதிய வந்தே பாரத் ரயிலின் பெட்டிக்குள் மழை நீர் கசிந்துள்ளது. இது குறித்த தகவல் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதுடெல்லி- வாரணாசி இடையே பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் சென்னை- மைசூர், சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பல்வேறு வசதிகளை கொண்டதாகும். முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலில், விமானத்திற்கு நிகரான வசதிகள் உள்ளன. சொகுசு இருக்கைகள், அடுத்தடுத்த வரும் ரயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு என பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் வந்தே பாரத் ரயிலில் செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்தே இருக்கும். வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. இந்த நிலையில், கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். கேரளாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வந்தே பாரத் ரயிலிலும் பயணிகள் போட்டி போட்டு முன்பதிவு செய்து ஆர்வமாக பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே, திருவனந்தபுரம் - காசர் கோடு இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்திலேயே மழை நீர் கசிந்துள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதல் பயணத்தை நிறைவு செய்த பிறகு வந்தே பாரத் ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு கனமழை பெய்தது. கனமழையால் வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் மழை நீர் ஒழுகியது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்தனர். இது குறித்து ரயில்வே அதிகரிகள் கூறுகையில், ஏசி வென்ட் வழியாக மழை நீர் கசிந்துள்ளது. ஒரே ஒரு பெட்டியில் மட்டுமே இந்த பிரச்சினை இருந்தது.
மற்றபடி வேறு பழுது எதுவும் இல்லை. உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் கொண்டதாக அறியப்படும் வந்தே பாரத் ரயிலுக்குள் மழைநீர் கசிந்த தகவல் பயணிகள் மத்தியில் ஆச்சர்யத்துடன் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications