வயநாடு தேர்தல்.. பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது பாஜக!
திருவனந்தபுரம்: வயநாடு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், பாஜக இன்று வேட்பாளரை அறிவித்துள்ளது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது.

இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது. இதனால், அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றதால், நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
உத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக மலையாள செய்தி சேனல்களில் செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை குஷ்பு முற்றிலும் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் பரவுகின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் நான் போட்டியிட போவதாக பேசப்படுகிறது. இதுவரை அந்த மாதிரி ஒரு தகவல் குறித்து கட்சி மேலிடம் என்னிடம் பேசவில்லை” என்றார். இந்த நிலையில், இன்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications