திருமணத்தில் போடும் தங்க நகைகள், பரிசுகள், விவாகரத்துக்கு பிறகும் பெண்களுக்கே சொந்தம்- கேரள ஐகோர்ட்
திருவனந்தபுரம்: திருமணத்தின் போது மணமகளுக்குப் போடப்படும் தங்க நகைகளும் ரொக்கமும் பெண்ணின் பிரத்தியேகச் சொத்தாகவே கருதப்பட வேண்டும் எனக் கேரள ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதுபோன்ற உடைமைகள் மீது பெண்களுக்கே சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும் விவாகரத்திற்குப் பிறகு நகைகள், பரிசுகளைப் பெண்களுக்கே வழங்க வேண்டும் எனக் கேரள ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். இதற்கிடையே திருமணத்தின்போது தனக்குப் போடப்பட்ட நகைகள், வழங்கப்பட்ட பரிசுகளைத் தனக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அந்தப் பெண் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கேரள ஐகோர்ட்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நகைகளையும் பரிசுகளையும் பெண்ணுக்கே வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. அதாவது திருமணத்தின் போது மணமகளுக்குப் பரிசாக வழங்கப்படும் தங்க நகைகள் மற்றும் பணம், அவர்களின் பிரத்தியேகச் சொத்தாக கருதப்பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.. இந்த நகை மற்றும் பரிசுகள் மீது பெண்களுக்கு உள்ள சட்டப்பூர்வ உரிமையை இது மீண்டும் உறுதி செய்கிறது.
பெண்ணுக்கே சொந்தம்
இந்த வழக்கில் கேரள ஐகோர்ட் நீதிபதிகள் மேலும் கூறுகையில், "பெண்களுக்கு வழங்கப்பட்ட நகைகள் மற்றும் உடைமைகளை கணவர் அல்லது மாமியார் உட்பட குடும்பத்தினர் தவறாகப் பயன்படுத்தியதாக நாம் பல வழக்குகளைப் பார்த்து இருக்கிறோம். இதுபோல திருமணத்தின் போது வழங்கப்படும் பரிசுகள், நகைகள் பெரும்பாலும் எந்தவொரு ஆவணமும் இல்லாமலேயே வழங்கப்படுகிறது. இதனால் அதன் மீதான உரிமையை நிரூபிக்கும் ஆவண ஆதாரங்களைப் பெண்களால் சமாளிக்க முடியாது. இதனால் உரிமையை நிரூபிக்க ஆதாரம் கோருவது நடைமுறைக்கு மாறானதாக இருக்கும்" என்றும் தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி
2010ல் நடந்த திருமணத்தின் போது தனது குடும்பத்தினர் 63 சவரன் தங்கம் மற்றும் இரண்டு சவரன் செயினை வழங்கியதாக அந்தப் பெண் கூறியிருந்தார். இது மட்டுமின்றி உறவினர்கள் ஆறு சவரன் தங்கத்தைப் பரிசாகக் கொடுத்தாக அந்தப் பெண் தரப்பில் குறிப்பிடப்பட்டது... இருப்பினும், தினசரி அணியும் தாலி, ஒரு வளையல் மற்றும் இரண்டு மோதிரங்களைத் தவிர, அனைத்து நகைகளையும் தனது மாமியார் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார். இந்தச் சூழலில், கணவர் திடீரென கூடுதலாக ரூ.5 லட்சம் கேட்டதாகவும் அப்போதுதான் தங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் குறிப்பிடுகிறார்.
நீதிபதிகள் உத்தரவு
மேலும், தனது பெற்றோர் பிக்சிட் டெபாசிட் வைத்திருந்த நிலையில், அந்தப் பணத்தில் தான் தங்கம் வாங்கப்பட்டதாக ஆதாரத்தையும் அந்தப் பெண் வழங்கினார். இந்த ஆவணங்களைப் பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், 59.5 சவரன் தங்கம் அல்லது அதன் தற்போதைய சந்தை மதிப்பை மணமகன் தரப்பு பெண்ணுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தனது உறவினர்கள் வழங்கியதாகச் சொல்லும் ஆறு சவரன் தங்கத்திற்கு ஆதாரத்தை அந்தப் பெண் வழங்க முடியவில்லை என்பதால் அந்த நகைக்கான கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வீட்டில் பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் திருப்பித் தர அந்தப் பெண் தனது மனுவில் கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ஆதாரம் கோர முடியாது
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "பெரும்பாலும் திருமணத்தின்போது வழங்கப்படும் நகைகளுக்கு எந்தவொரு எழுத்துப்பூர்வ ஆவணங்களும் இருப்பதில்லை. இதனால் பெண்கள் அவர்களின் சொந்த நகைகளை அணுக முடியாமல் போகலாம். இதனால் பிரச்சினை எழும்போது, குறிப்பாகக் குடும்ப வன்முறை, வரதட்சணை அல்லது விவாகரத்து போன்ற வழக்குகளில், பெண்கள் தங்கள் தங்க நகைகளைக் கோரலாம்.. இருப்பினும், அப்போது நீதிமன்றங்கள் நடைமுறைச் சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.. கடுமையான ஆதாரத்தை வலியுறுத்த முடியாது" என்றனர்.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications