படகு கிளம்பி அரை கி.மீ.தான் போயிருக்கும்.. கீழ் பகுதியில் சிக்கிய குழந்தைகள் அலறல்! ஐ விட்னஸ் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் விளக்கியுள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த தானூர் அருகே ஓட்டும்புரத்தில் நேற்று இரவு தூவல் தீர்த்தம் ஆற்றில் 40 பேருடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதி அருகே சென்ற போது அந்த படகு திடீரென தலைக்குப்புற கவிழ்ந்தது.

what happened in Kerala Accident, Eye witness reports

இந்த விபத்தில் இதுவரை 22 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். படகு கவிழ்ந்ததும் அங்கிருந்த மீனவர்கள் சிலர் நீச்சல் அடித்து சிலரை காப்பாற்றியுள்ளனர். கேரளாவில் கோடை விடுமுறைக்காக சுற்றுலா பயணிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Worst In History | Kerala Boat விபத்து நடந்தது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்? | Oneindia Tamil

    காயமடைந்தவர்கள் திரூர், தானூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து நடந்தவுடன் ஷஃபீக் எனும் இளைஞர் தண்ணீரில் நீந்தி சிலரை காப்பாற்றினார். அவர் மனோரமா செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அந்த படகு டபுள் டெக்கர் படகாகும். அதில் இரு கதவுகள் இருந்தன.

    what happened in Kerala Accident, Eye witness reports

    ஆனால் படகு தலைக்குப்புற கவிழ்ந்ததும் வெளியே வர முடியாமல் நிறைய பேர் சிக்கிக் கொண்டனர். ஆற்றிலிருந்து படகு புறப்பட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்தது. சிறிய சிறிய குழந்தைகள் உள்பட நிறைய பேர் இருந்தனர். என்னால் முடிந்தவரை சிலரை காப்பாற்றினேன். ஆனால் கீழ் டெக்கில் இருந்த பலர் வெளியே வரமுடியாமல் தவித்தனர். குறிப்பாக குழந்தைகள் வெளியே வர அவதிப்பட்டனர்.

    படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியதும் பாதுகாப்பு அம்சங்களை கொடுக்காததும்தான் விபத்திற்கு காரணம் என சொல்கிறார்கள். மேலும் படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றியதும் இந்த விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் விபத்து நடக்கும் போதெல்லாம் பாதுகாப்பு பற்றி பேசுவது பின்னர் அதுகுறித்த கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+