காரணம் இதுதான்.. கேரளாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஏன்? சரணடைந்த நபர் சொன்ன பகீர் தகவல்.. ஷாக்
திருவனந்தபுரம்: கேரளா களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டத்தில் இன்று அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்த நிலையில் டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணமடைந்துள்ளார். இந்நிலையில் தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்கான காரணம் குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் இன்று நடந்தது. திடீரென்று இன்று காலை சுமார் 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் அடுத்தடுத்து வெடித்தது.

இதில் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி கேரளா போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் என்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். அப்போது ஐஇடி வகையை சேர்ந்த டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதற்கிடையே தான் டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை டொமினிக் மார்ட்டின் நிகழ்த்தியது ஏன்? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குண்டு வெடிப்பை நிகழ்த்திய பிறகு டொமினிக் மார்ட்டின் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் கூறியதாவது:
One man named Dominic Martin through a Facebook Video has taken responsibility for the Kerala bomb blasts. He has claimed he is part of the same Christian group which had organised the event. His claims are being verified by the Kerala Police. Joint investigation by NIA & Police. pic.twitter.com/AUXc6fOy1K
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 29, 2023
என் பெயர் மார்ட்டின். Jehovah Witnesses group-ல் அமைப்பால் நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். நான் ஏன் இந்த செயலை செய்தேன் என்பதை விளக்கவே பேஸ்புக்கில் இந்த லைவ் வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு என்பது தவறானது என உணர்ந்தேன்.
இதன் போதனைகள் நாட்டுக்கு எதிரானது என்பதை நான் உணர்ந்தேன். இதுபற்றி அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். மேலும் தேசவிரோத செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மாறவில்லை. தொடர்ந்து தங்களின் கொள்கைகளை போதித்தனர். இதனை நான் எதிர்க்கிறேன்.
அதோடு இந்த அமைப்பு என்பது தேவையில்லை என்பதையும் நான் முழுமையாக கூறி கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நான் காவல் நிலையத்தில் சரணடைவேன். மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை. இந்த நேரத்தில் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். குண்டு வெடிப்பை நிகழ்த்த நான் எப்படி திட்டமிட்டேன் என்ற விபரங்களை செய்தி சேனல்கள் மற்றுமு் வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது. ஏனென்றால் இது ஒவ்வொரு சாமானியனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்'' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications