மெட்ரோ ரயில் தெரியும்! அதென்ன வாட்டர் மெட்ரோ! இனி ஜாலியா மிதந்துகிட்டே போகலாம்! நாட்டில் முதல்முறை
திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ என்ற புதிய வகையிலான மெட்ரோவை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். அதென்ன வாட்டர் மெட்ரோ அது எப்படி பயன் தரும் என்பதைப் பார்க்கலாம்.
உலகளவில் இந்தியா மிக வேகமாக வளரும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல நமது நாட்டில் மக்கள் தொகை லெவலில் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன நெருக்கடியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சென்னை போன்ற நகரங்களில் நீங்கள் வெளியே சென்றால் நிச்சயம் டிராபிக்கில் சில மணி நேரம் வரை நிற்க வேண்டி இருக்கும். சென்னை மட்டுமின்றி நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இதை நிலை தான்.
பொது போக்குவரத்து: நாம் என்ன தான் புதிய சாலைகள் அமைத்து, பாலங்களைக் கட்டினாலும் கூட டிராபிக் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைத்தால் மட்டுமே டிராபிக் பிரச்சினை குறையும். ஏனென்றால் பொதுமக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், சாலைகளில் வாகன நெரிசல் குறையும். மேலும், காற்று மாசும் கணிசமாகவே குறையும். இதனால் பல ஐரோப்பிய நகரங்கள் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் கூட இப்போது பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. டிராபிக்கை சமாளிக்கலாம், சொன்ன நேரத்தில் செல்ல முடியும், வானிலை பிரச்சினை இல்லை உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் அதையே பயன்படுத்துகிறார்கள். மெட்ரோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வாட்டர் மெட்ரோ: இதனிடையே இந்தியாவிலேயே முதல்முறையாகக் கேரளாவில் வாட்டர் மெட்ரோவை கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இது அப்பகுதியில் பொருளாதாரத்தை பூஸ்ட் செய்யப் பெரியளவில் உதவும். சரி மெட்ரோ ரயில் குறித்துத் தெரியும். அதென்ன வாட்டர் மெட்ரோ என்கிறார்களா.. வாருங்கள் வாட்டர் மெட்ரோ குறித்து A to Z தெளிவாகப் பார்க்கலாம்.

இந்த வாட்டர் மெட்ரோ என்பது இந்தியாவிலேயே இப்போது தான் முதல்முறையாகக் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "வழக்கமான மெட்ரோ அமைப்பைப் போலவே அதே அனுபவம் மற்றும் எளிதான பயண வசதியைத் தரும் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு தான் இந்த வாட்டர் மெட்ரோ" என்கிறார்கள்.கொச்சி போன்ற நகரங்களுக்கு இந்த வாட்டர் மெட்ரோ பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும்.
எவ்வளவு செலவு: துறைமுக நகரமான கொச்சியில் சுமார் ரூ.1,136.83 கோடி செலவில் இந்த மெட்ரோ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ அமைப்பு கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கிறது. கொச்சி நகரின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், "உலகத் தரம் வாய்ந்த கொச்சி வாட்டர் மெட்ரோ திறக்கப்பட உள்ளது. இது கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் கேரளாவின் கனவுத் திட்டமாகும். 78 மின்சார படகுகள் மற்றும் 38 முனையங்களுடன் 1,136.83 கோடி செலவில் கேரள அரசு மற்றும் ஜெர்மனி நிறுவனத்தின் நிதியில் இது கட்டப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளனர்.
ஏசி படகுகள்: திட்டத்தின் முதல் கட்டத்தில், அங்குள்ள உயர் நீதிமன்ற- வைபின் டெர்மினல்களில் இருந்து வைட்டிலா- காக்கநாடு டெர்மினல்களுக்கு வரை சேவைகள் இருக்கும். அதன் பின்னர் படிப்படியாக இத்திட்டம் முழுமையாக நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ என்பது குளிரூட்டப்பட்ட படகுகளில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உதவும். மேலும், இதன் கட்டணம் குறைவாகவே இருக்கும் என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் மக்கள் அந்தந்த இடங்களை அடையவும் இது மிகப் பெரியளவில் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொச்சி கேரளாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகும்.. இந்த வாட்டர் மெட்ரோ போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நீர்நிலைகள் மூலம் எளிய போக்குவரத்தை முறையை உருவாக்கவும் உதவும். இதில் பயன்படுத்தும் படகுகள் பேட்டரி மூலமான ஹைபரிட் படகுகள் மூலம் இயக்கப்படும்.
சூப்பர் அனுபவம்: இந்த வாட்டர் மெட்ரோவில் 78 கிமீ நீளமுள்ள 15 வழித்தடங்கள் மெட்ரோ இயக்கப்படும். குறைந்த செலவில், மக்களுக்குச் சவுகரியமான ஒரு அனுபவத்தை இது தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி மெட்ரோவை பயன்படுத்த இருக்கும் "கொச்சி 1" கார்டைப் பயன்படுத்தி கொச்சி மெட்ரோ மற்றும் வாட்டர் மெட்ரோ என இரண்டிலும் பயணிகள் பயணம் செய்யலாம். மேலும், டிஜிட்டல் முறையிலும் டிக்கெட் எடுத்தும் பணிக்கலாம். இத்திட்டம் அங்கிருக்கும் சுமார் ஒரு லட்சம் பேருக்குப் பெரியளவில் பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications