அர்ச்சகர் செய்த காரியம்.. 2 சிறுமிகள் முன்பு குழந்தை பலாத்காரம்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்
சிறுமியை பலாத்காரம் செய்த கேரள பூசாரிக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கோயில் அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து கேரள ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மது நாராயணன்.. இவர் ஒரு கோயில் அர்ச்சகர்.. சில வருடங்களுக்கு முன்பு சாலையோரம் ஆதரவற்ற ஒரு பெண்ணையும் 3 குழந்தைகளையும் சந்தித்தார்..
இதில் அந்த பெண்ணுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களுக்கு ஆதரவு தருவதாக சொல்லி தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வந்தார்...

டார்ச்சர்
பிறகு அதில் ஒரு குழந்தைக்கு ஒரு வருடமாக பாலியல் டார்ச்சர் தந்துள்ளார் அந்த அர்ச்சகர்.. இந்நிலையில், மறுபடியும் அந்த பெண்ணும், 3 குழந்தைகளும் சாலையோரத்தில் தங்க ஆரம்பித்தனர்.. இதை பார்த்த மலபார் போலீசாரும், அவர்களை அழைத்து சென்று காப்பகத்தில் தங்க வைத்தனர்... அப்போதுதான் 3 குழந்தைகளையும் பரிசோதனை செய்தபோது, அதில் ஒரு குழந்தை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

விசாரணை
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மது நாராயணனை கைது செய்தனர்... இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், மது நாராயணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.. ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக மது நாராயணன் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்.. அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே தந்த தீர்ப்பை உறுதி செய்தனர்.

தீர்ப்பு
நீதிபதிகள் அப்போது தீர்ப்பில் சொன்னதாவது: "இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வயது நிரூபிக்கப்படவில்லை... ஆனால், அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.. ஒரு வருடமாகவே சிறுமியை அர்ச்சகர் பலாத்காரம் செய்திருக்கிறார்.. ஒரு ஆண், தன் மனைவியையும், குழந்தைகளையும் காப்பாற்றாமல், நிர்க்கத்தியாய் கைவிட்டுவிட்டால், அவர்களை கொத்தி செல்ல பருந்து கூட்டங்கள் காத்திருக்கும்...

பருந்துகள்
ஆனால் இதில் ஆதரவற்ற பெண்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் அந்தப் பருந்துகள் கொத்திச் செல்லும். அப்படித்தான், கோயில் அர்ச்சகர் பெண்ணையும், அவரது 3 குழந்தைகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்.. அதில் வயதில் மூத்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்... அதிலும் இந்த பலாத்காரத்தை மற்ற 2 குழந்தைகளின் கண்முன்னாடியே செய்திருக்கிறார்..

பலாத்காரம்
ஒரு குழந்தையை பலாத்காரம் செய்த ஒரு அர்ச்சகரின் பூஜைகளையும், வழிபாட்டையும் எந்த கடவுள் ஏற்றுக்கொள்வார்? இவர்களை எப்படி அவரை கடவுளுக்கும் பக்தருக்கும் நடுவில் பாலமாக இருப்பவர்களாக சொல்ல முடியும்? அந்த பெண் யாரேன்றே தனக்கு தெரியாது என்கிறார், ஆனால், அவரையும், அவரது 3 குழந்தைகளையும் தன்னுடைய வீட்டில்தான், வைத்திருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

வெட்கக்கேடு
அந்த தாயின் மனநிலை இவ்வாறு இருப்பது இந்த சமூகத்துக்கே வெட்கக்கேடு... பெற்ற குழந்தைகளுக்கு சாப்பாடு இல்லை, தங்கும் இடம் இல்லை.. அதனால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.. குழந்தைகள் தனித்து விடப்பட்டதால்தான், பாலியல் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளனர். அர்ச்சகர் மீதான போக்ஸோ வழக்கு ரத்து செய்யப்பட்டாலும், பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது... அவரின் மேல்முறையீட்டு மனுவையும் இந்த கோர்ட் தள்ளுபடி செய்கிறது" என்றனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications