"வர்றது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே".. அதைவிடுங்க.. வெலவெலத்த கணவர்.. லாஸ்ட்ல ட்விஸ்ட்டை பாருங்க
திருவனந்தபுரம்: தம்பதியை கோர்ட் வரை கொண்டுவந்துவிட்டு விட்டது அந்த ஒரே ஒரு போட்டோ.. தம்பதியின் குறுக்கே வந்த பெண் யார்? என்ன நடந்தது?
கடந்த மாதம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு சம்பவம் நடந்தது.. ராம்குமார் என்பவருக்கு 30 வயதாகிறது.. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் சபீதா.. இருவருமே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
கருத்து வேறுபாடு: கருத்து வேறுபாடால் அடிக்கடி தகராறு இருந்துவந்தது என்றாலும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறார்கள்.. இதனிடையே, தன்னுடன் வேலை பார்த்துவரும் ரம்யா என்ற பெண் போலீஸிடம் நெருங்கி பழகியதுடன், ரம்யாவை கல்யாணமும் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார் ராம்குமார்.

அதற்காக, சபிதா தன்வீட்டில் இருக்கும்போதே, அவரது பெற்றோர் வீட்டில் உள்ளதை போன்று, ஆலப்பாக்கம் அட்ரஸூக்கு விவாகரத்துக்கான நோட்டீஸை அனுப்பிவிட்டார் ராம்குமார்.. இந்த விஷயம் தெரியாமலேயே சபிதா, கணவர்மீது வழக்கமான கோபத்துடன், தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு நிஜமாகவே சென்றுவிட்டார்..
ஐயோ பொண்டாட்டி: இதையே சாக்காக பயன்படுத்தி கொண்டு, சபிதாவுக்கு தெரியாமலேயே மயிலாடுதுறை கோர்ட்டில் ஒருதலைபட்ச தீர்ப்பாக விவாகரத்து பெற்றதுடன், திருவெண்காடு கிராமத்தில் உள்ள கோயிலில் உறவினர் முன்னிலையில் ரம்யாவை திருமணம் செய்ய தயாரானார் ராம்குமார். திருமணத்தன்று இந்த விஷயம் சபிதாவின் காதுகளுக்கு எட்டிவிடவும், பெற்றோர் உறவினருடன் கோயிலுக்குள்ளேயே ஆவேசமாக நுழைந்தார் சபிதா..
ஆனால், தூரத்தில் சபிதாவை பார்த்ததுமே, ராஜ்குமாருக்கு வெலவெலத்து போய்விட்டது.. அங்கிருந்து, தப்பி ஓடினார்.. ஓடும்போது ரம்யாவையும் தன் கையோடு இழுத்துக் கொண்டு ஓடினார்.. இவர்களை விரட்டிக்கொண்டே ஒரு கும்பல் பின்னாடியே சென்றது. இந்த காட்சி அனைத்துமே வீடியோவாக வெளிவந்தது.
ஹெல்மெட்: இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்டுபிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் வைக்கப்பட்டன... அதாவது, சாலைகளில் அதிவேகமாக செல்பவர்கள், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை உடனுக்குடன் போட்டோ எடுத்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் செல்போனுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

டூ வீலர்: அப்படி போட்டோ அனுப்பும்போதுதான் அந்த நபர் சிக்கியுள்ளார்.. திருவனந்தபுரம் கரமனையைச் சேர்ந்த இளைஞர்.. 32 வயதாகிறது.. ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்... கல்யாணம் ஆகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி, தன்னுடைய பெண் தோழியுடன் திருவனந்தபுரத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார்... ஆனால் 2 பேருமே ஹெல்மெட் போடவில்லை.. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகிவிட்டது.
இதில் விஷயம் என்னவென்றால், அந்த டூவீலர் அவருடைய மனைவியுடையது.. மனைவி பெயரில்தான், ரிஜிஸ்திரேஷன் செய்துள்ளார்.. சம்பவத்தன்று ஸ்கூட்டியில் வெளியே சென்றுவிட்டு, சில மணிநேரம் கழித்து வீட்டுக்கு வந்துவிட்டார்.
மெசேஜ் போட்டோ: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, இவரது மனைவியின் செல்போனுக்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில், குறிப்பிட்ட தேதியில் ஸ்கூட்டரில் 2 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு ரூ.1000 அபராதம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது... அத்துடன் ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது.. அந்த போட்டோவை பார்த்தால், யாரோ ஒரு பெண்ணை, ஸ்கூட்டரின் பின்சீட்டில் உட்கார வைத்து கணவர் சென்றுள்ளது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ந்து போனார் அந்த மனைவி..
அப்பறம் என்ன? ஒரே செகண்ட்டில் கோவை சரளாவாக உருவெடுத்தார் மனைவி.. யார் அந்த பெண் என்று கணவரிடம் கேட்டதுமே, அவர் திருதிருவென விழிக்க ஆரம்பித்தார்.
தயாள குணம்: போட்டோ வரைக்கும் விவகாரம் போய்விட்டதே என்று உறைந்துபோய் நின்றார்.. பிறகு, அந்த பெண் ரோட்டில் சென்றபோது, தன்னிடம் லிப்ட் கேட்டதாகவும், அதனால்தான் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் எதையோ கூறி சமாளித்தார்.. ஆனாலும் மனைவி அதை நம்பவில்லை.. வாக்குவாதம் ஆரம்பமானது.. தகராறு முற்றியது.. கைகலப்பு நடந்தது.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆளுக்கு ஒருபக்கம் ஓடினார்கள்.. தன்னையும், தன்னுடைய 3 வயது மகளையும் கணவர் தாக்கியதாக மனைவி புகார் தந்தார்.. கடைசியில் லிப்ட் தந்த "தயாள குணம்" படைத்த கணவர், ஜெயிலில் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்..
டிராபிக் போலீசாரால் ஒரு குடும்பமே பிரிந்துவிட்டதாக இணையத்தில் சிலர் கமென்ட்களை தெரிவித்து வருகிறார்கள் என்றாலும், கேரளாவின் இந்த புதிய திட்டத்துக்கு வரவேற்புகள் கூடிவருகின்றன.. மற்றொருபக்கம் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன..
"ஒரு திட்டகுடும்பம் பாதுகாப்பான கேரளா" என்ற திட்டத்தின்கீழே அரசு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாகத்தான், சாலை போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் பொருட்டு அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, காவலர்களையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தி வருகின்றது அம்மாநில அரசு.. அதைத் தொடர்ந்து வாகனங்களின் நம்பர் பிளேட்டை பார்த்து விதிமீறலில் ஈடுபட்ட நபர்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளிடம் நல்ல மாற்றம் தென்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை, காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.. இப்படியான சிசிடிவி கேமராக்களை பொருத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.. ஆக, நவீன கேமிராக்களால் ஒருபக்கம் சர்ச்சையும், மறுபக்கம் வரவேற்பும் கிளம்பி உள்ளன.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications