காங்கிரஸ் வென்றால் இவர் தான் முதல்வர்.. கேரளாவில் "கை"க்கு எழுச்சியை கொடுத்த சதீசன்.. யார் இவர்?
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குறித்து நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், அவரை எதிர்த்துக் களமிறங்கும் காங்கிரஸின் முக்கிய முகமாக இருக்கும் வி.டி. சதீசன் குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது.. யார் இந்த வி.டி. சதீசன்.. இவரது பின்னணி என்ன? அரசியலில் இவர் கடந்து வந்த பாதை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கேரளாவில் இந்த முறை இடதுசாரிக்கும் காங்கிரஸுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி வெல்லும்பட்சத்தில் முதல்வர் ரேஸில் பலர் இருந்தாலும் அதில் வி.டி. சதீசன் தான் ரேஸில் முன்னணியில் இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வி.டி. சதீசனே முதல்வராக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

யார் இந்த சதீசன்
கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், யு.டி.எஃப். கூட்டணியின் முக்கிய தலைவருமான வி.டி. சதீசன், பரவூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளாக சுதீதன் தான் எம்எல்ஏவாக இருக்கிறார். 2001ஆம் ஆண்டு முதல் கேரள அரசியலில் முக்கிய முகமாக இருக்கும் இவர், தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, பிரச்சாரம் நடத்தினார்.
இவர் கடந்த 2001ம் ஆண்டு கேரளாவில் எதிர்க்கட்சி தலைவராகப் பதவியேற்றார். கேரள மாநில காங்கிரஸின் தலைமை அடுத்த தலைமுறைக்குச் செல்வதைக் காட்டும் வகையில் இந்த மாற்றம் இருந்தது. அப்போது முதலே கேரளாவில் இவர் இறங்கி வேலை செய்து வருகிறார். அரசின் குறைகளைத் தொடர்ந்து மக்களிடையே எடுத்துச் செல்கிறார். தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில், இவர் ஆளும் எல்.டி.எஃப். அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியையும், யு.டி.எஃப். கூட்டணியின் ஒற்றுமையையும் முன்னிறுத்தி வருகிறார்.
பின்னணி
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.டி. சதீசன், 1964 மே 31ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் நெட்டூரில் பிறந்தவர்.. கேரள சட்ட அகாடமி மற்றும் திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். கேரளாவில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்களைப் போலவே இவரும் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் அமைப்புகளில் இருந்தார். அதன் மூலமாகவே அவர் அரசியலுக்கும் வந்தார்.
மாணவர் சங்கம்
பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மற்றும் சட்டமன்றத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் சதீசன். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைமை கொறடாவாகவும் இருந்துள்ளார். கேரளா காங்கிரஸின் மிகவும் வெளிப்படையான மற்றும் தெளிவாகப் பேசும் தலைவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். KSU எனப்படும் கேரள மாணவர் யூனியன் மூலம் அரசியலுக்கு வந்த இவர் படிப்படியாக இப்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை அடைந்துள்ளார்.
ஆதரவு
நாயர் சமூகத்தைச் சேர்ந்த சதீசனுக்கு அந்த சமூகத்திலும் கணிசமான ஆதரவு இருக்கிறது. அதேநேரம் மற்ற சாதிகள் மற்றும் சமூகங்கள் மத்தியிலும் முக்கியமான தலைவராக இருக்கிறார். மக்கள் ஆதரவும் கட்சி மற்றும் சட்டசபை பணிகளும் தான் இவரை கேரளாவில் காங்கிரஸின் முதல்வர் ரேஸில் முன்னணியில் வைத்து இருக்கிறது. இவரது முதல்வர் கனவு கைகூடுமா என்பதை மே 4ம் தேதி தெரிய வரும்!
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications