திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாடையை கழட்ட சொன்னாங்க.. குமுறிய மாணவி.. நீட் தேர்வில் என்ன நடந்தது.. வழக்கு பதிந்தது கேரள போலீஸ்

உள்ளாடைகளை கழட்ட சொன்னதாக வெடித்த புகாரால், கொல்லம் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: உள்ளாடைகளை கழட்ட சொன்னதாக, மாணவி புகார் அளித்ததையடுத்து, மகளிர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.. மேலும், நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை நடத்திய ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் நீட் தேர்வு நாடு முழுவதும் நடந்தது.. அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில், நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் கடுமையான சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், 'பிரா'வை அகற்றிய பின்னரே எக்ஸாம் ஹாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று சொல்லப்பட்டதாம்..

நீட் நுழைவுத் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக காவல்நிலையத்தில் புகார்நீட் நுழைவுத் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக காவல்நிலையத்தில் புகார்

 ஹூக் - 3 மணி நேரம்

ஹூக் - 3 மணி நேரம்

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதியுள்ளனர்... இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகாரும் அளித்திருந்தார்.. சூரநாடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியின் பெற்றோர், கொல்லம் ரூரல் எஸ்பியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்... 3 மணி நேரம் உள்ளாடை இல்லாமல் தேர்வு அறையில் அமர்ந்திருந்ததால் தன மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

 மெட்டல் ஹூக்

மெட்டல் ஹூக்

இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் சொல்லும்போது, "தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து டெஸ்ட் செய்துள்ளார்.. பிராவில் மெட்டல் ஹூக் இருந்துள்ளது.. அதனால் பீப் சப்தம் கேட்டிருக்கிறது.. உடனே உள்ளாடையை அகற்றி வெளியே வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள்.. இதை ஏற்றுக்கொள்ள கொள்ள முடியாமல் அந்த மாணவி கதறி அழுதுள்ளார்.. இதற்கு அந்த அதிகாரி மாணவியை மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். தேர்வு முக்கியமா? உன்னுடைய உள்ளாடை முக்கியமா? என்று கேட்டார்..

 உள்ளாடை

உள்ளாடை

தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல், ஓரமாக நின்று அழுவதைக் கண்ட இன்னொரு அதிகாரி அருகில் சென்று என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.. நிலைமையை புரிந்துகொண்ட அவர், அந்த மாணவியிடம் அவர் அம்மாவின் போன் நம்பரை வாங்கி பேசியுள்ளார்.. ஸ்கூலுக்கு கிளம்பி வரும்படியும், வரும்போது, துப்பட்டாவை கொண்டுவரும்படி சொல்லி உள்ளார்.. பிறகுதான் மாணவி, தன் குடும்பத்தாரிடம் விஷயத்தை சொல்லி போலீஸ் வரை புகார் போயுள்ளது" என்றனர்.. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து, சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 ஏஜென்சிகள்

ஏஜென்சிகள்

இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொல்லம் ரூரல் எஸ்பி க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது... அதேபோல, கேரள மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளது., மேலும், இளைஞர் நல ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது... கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்துவும் நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. " உள்ளாடையை அகற்றச் சொன்னது பொறுப்பற்ற செயல்... இது குறித்து எழுத்துபூர்வமாக மத்திய அரசிடம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்றார்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்கள் 354 (பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் வற்புறுத்துவது) 509 (பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆனால், நடந்த சம்பவத்தை மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சார்பில் மறுக்கிறார்கள்.. "செக்யூரிட்டி, கேமரா, மாணவர்களை பரிசோதிப்பது இதெல்லாம், வெளிஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன..

 களைய சொல்லவில்லை

களைய சொல்லவில்லை

அட்மிட் கார்டு, அடையாள அட்டையை செக் செய்வது மட்டுமே எங்கள் கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர்.. மற்றபடி நடந்த சோதனையை நாங்கள் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்கள். அதேபோல, தேசிய தேர்வுகள் முகமை இதுகுறித்து விளக்கம் ஒன்றையும் தந்துள்ளது.. அதில், கேரளாவில் நீட் எழுதவந்த மாணவியிடம் உள்ளாடையை களைய சொன்னதாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக உடனடியாகவும், நீட் தேர்வுக்கு பிறகும் எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
why did kollam police case against the institute and girls allegedly forced to remove bra to appear for neet exam உள்ளாடைகளை கழட்ட சொன்னதாக வெடித்த புகாரால், கொல்லம் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X