அரசு பஸ்சில் தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்.. பெண் யூடியூபர் செய்த துணிச்சலான காரியம்
திருவனந்தபுரம்: கேரள அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது, தனது தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை, இளம்பெண் ஒருவர் கன்னத்தில் பளார் விட்ட துணிச்சல் சம்பவம் அரங்கேறியுள்ளது. உங்க வீட்டில் பொண்ணுங்க இல்லையா? எனக்கேட்டு அந்த நபரை சரமாரிய கேள்வி எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பெண்கள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக சிறுமிகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கயவர்களால் சிறுமிகளை தனியாக எங்கும் வெளியில் அனுப்பவதற்கு பெற்றோர்கள் அச்சப்பட்டு வருகிறார்கள்..

சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ
பள்ளி சென்று வரும் போது கூட இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அண்மையில் திருவள்ளூரில் பள்ளி முடிந்து தனியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சிறுமியை பின்னால் இருந்து வந்து தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல் அரசு பஸ்களில் செல்லும்போது, ரயில்களில் செல்லும் போது என பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்த நிலையில் கேரளாவில் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்து போன் சிறுமியின் சகோதரி முதியவரை கன்னத்தில் பளார் என அறைந்து, உங்கள் வீட்டுலயும் பெண்கள் இருக்கிறார்கள் தானே என்று திட்டி தீர்த்துள்ளார். தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை துணிச்சலாக தாக்கி, சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி உள்ளன.
சிறுமியை தொட்டு பாலியல் சீண்டல்
அரசு பஸ் ஒன்றில் சிறுமி மற்றும் அவரது மூத்த சகோதரி இருவரும் சென்றுள்ளனர். 3 இருக்கை கொண்ட அந்த அரசு பஸ்சில் முதியவர் ஒருவரும் அமர்ந்துள்ளார். ஜன்னல் ஓரத்தில் சிறுமியின் சகோதரியும், நடுவில் சிறுமியும், அதற்கு அடுத்ததாக முதியவரும் இருந்துள்ளார். சிறுமி அருகில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி கையால் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுபற்றி அக்காவிடம் சொல்லியிருக்கிறார்.
சாரிம்மா.. மன்னித்துவிடு
அவரும் பதறாமல் நிதானமாக அந்த முதியவர் செய்யும் லீலைகளை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண் முதியவரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். மேலும் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?.. அவர்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வாயா என சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார். இதனால் அதிர்ந்து போன முதியவர் சாரிம்மா.. என்னை மன்னித்துக்கொள் என்று இரு கை எடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
அந்த பெண் பிரபல யூடியூபர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்த பெண் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓடும் பேருந்தில் தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். பெண் கொடுத்த இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications