கோடையில் குதூகலமாக குளிக்க..குதிரை குளிப்பாட்டி அருவி! 100 ரூபா தான் செலவே..எங்கே இருக்குனு தெரியுமா?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி போன்ற எத்தனையோ நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் எளிமையான முறையில் இயற்கை சுற்றுச்சூழலில் பாதுகாப்பான முறையில் சிறிய அளவிலான நீர்வீழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு குளிக்கும் குதூகலம் கிடைப்பது எளிதில்லை.
இப்படிப்பட்ட சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது என தேடிய போது கிடைத்தது தான் குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் தான் அமைந்திருக்கிறது . இந்த காமராஜர் அணையின் கரையோரமாக மலையை நோக்கி 2 கிலோமீட்டர் கடந்து வந்த பிறகு மலையிலிருந்து வரும் குதிரை குளிப்பாட்டி ஓடை நீர்வீழ்ச்சிதான் இந்த குதூகலம் மிக்க இடம். திண்டுக்கல்லில் இருந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாலே அங்கு போய்விட்டு வந்து விடலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த இடம் இருப்பது தெரியாது. ஏனென்றால் ஆத்தூர் காமராஜர் அணையின் கரையோரமாக வந்து ஓடையை கடந்து , சிறிய புதர் போல காட்சியளிக்கும் தட்டைகளின் நடுவே சிறிய வழித்தடம் ஒன்று இருக்கும் அதனை கடந்து வந்தால் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமார் கோவில் அமைந்திருக்கும்.

இந்த கோவில் அருகே தான் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி வருகிறது. குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி மலைகளில் நடுவே இருந்து வருவதாக கூறுகின்றனர். இருந்தாலும் அந்த மலைகளில் நடுவே செல்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அந்த மலையில் இருந்து வரும் குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி ஓடை பாதையை குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி என்று கூறுகின்றனர் .

இந்தக் கன்னிமார் கோவிலில் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் செய்யும் பொதுமக்கள் விசேஷ நாட்களில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்று. இவ்வாறு கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களும் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த ஓடையில் குளித்துவிட்டு தான் கோவிலில் வந்து பூஜை செய்து வழிபடுவதாக கூறுகின்றனர்.
மேலும் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி ஓடை மலைகளின் நடுவே அமைந்திருப்பதால் வாரத்திற்கு நான்கு ஐந்து முறையாவது தினமும் சிறிதளவாவது மழை பெய்து கொண்டே நான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications