திமுக அரசா இப்படி.. அதுவும் ஆடி மாதத்தில்.. சென்னை மக்களே, வேற லெவல் திட்டம்.. ரெடியாக இருங்க!
சென்னை: ஆடி மாதத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து ஒரு சூப்பர் ஏற்பாட்டினை செய்து வருகிறார்கள். இதன்படி சென்னையில் பக்தர்கள் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இது எப்படி செய்ய போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.குறிப்பாக ஆடி மாதம் என்பது ஆன்மிக மாதம் என்று அழைக்கும் அளவிற்கு தனிச்சிறப்பு உள்ள மாதம் ஆகும். ஆடி மாதத்தில் எந்த சுப காரியங்களும் வைக்க மாட்டார்கள்.
ஆடி பெருக்கு ஒரு நாளை (ஆடி 18) தவிர ஆடி மாதத்தில் திருமணம், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், புதுவீடு புகுதல் உள்பட எந்த சுபகாரியமும் நடைபெறாது.

வறட்சி மற்றும் வறுமை தான் ஆடி மாதங்களில் பொதுவாக ஏற்படும். அப்போது வறட்சி மற்றும் மற்றும் வறுமையின் கோரத்தில் இருந்து மன நிம்மதி அடைய மக்கள் இந்த ஆடி மாதத்தில் அம்மனை வழிபடுவார்கள். மக்கள் வெள்ளம் அம்மன் கோவில்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு தரிசனங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஆன்மிக சுற்றுலா என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு இந்தத்திட்டம் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆடி மாத பிறப்பையொட்டி சென்னையில் 2 பிரிவாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட போகிறார்கள்.

வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்க போகிறது. முதல் பிரிவில், முக்கிய கோவில்களான பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காளப்பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரிய பாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காளப்பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் ஆகிய 10 கோவில்களுக்கு பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் ஆன்மிக பயணத்திற்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2-வது பிரிவாக மயிலாப்பூர் கபாலீசுவரர், முண்டக கண்ணியம்மன், கோலவிழியம்மன், தியாகராயநகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உணவு, தரிசன ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் செய்வார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் சுற்றுலாத்துறை இணையதளத்தில் இதற்கு விண்ணப்பித்தால் அவர்கள் விரும்பிய நாளில் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வார்கள். இந்த சுற்றுலாவிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications