சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணிடம்.. அத்துமீறிய லாட்ஜ் ஊழியர்.. குளிர்பானத்தில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் இந்தியாவிற்கு வந்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான குடகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதனை குடித்த பின்னர் அமெரிக்கப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்துக்கு வந்த அந்தப் பெண், குடகு மாவட்டம் பொன்னம்பேட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கேரள எல்லையில் குட்டா பகுதியில் உள்ள விடுதியில் அறை முன்பதிவு செய்து தங்கியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி, அந்த விடுதியில் பணியாற்றும் ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் குமார் என்பவர், அமெரிக்கப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார்.

American woman student who came to tour at Coorg Karnataka what happened

அதனை குடித்ததும் அமெரிக்கப் பெண் மயங்கினார். அப்போது, பிரிஜேஷ் குமார் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது, இதையடுத்து சுயநினைவு திரும்பிய பிறகு, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அமெரிக்கப் பெண் உணர்ந்தார். பின்னர், மைசூருவுக்குச் சென்ற அந்தப் பெண், அமெரிக்கத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு தான் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை கூறியிருக்கிறார். இதையடுத்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக மைசூருவில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதையடுத்து குட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து அமெரிக்கப் பெண்ணைப் பலாத்காரம் செய்த பிரிஜேஷ் குமார், சம்பவத்தை மறைக்க முயன்ற தங்கும் விடுதி உரிமையாளர் விஷால் ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுற்றுலா தலங்களில் இதுபோன்ற அசிங்கமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தங்கும் விடுதிகளில் முறையான சிசிடிவி மற்றும் ஊழியர்கள் பின்னணி சரிபார்ப்பு அவசியம் ஆகும். சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் வெளிநாட்டினர், ஒரு இடத்திற்கு வரும்போது தங்களின் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதுகின்றனர். குடகில் நடந்த விபரீதம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆதார் மற்றும் நிரந்தர முகவரியைக் கொண்டு காவல்துறை சரிபார்ப்பு செய்வது நல்லது.

அதேபோல் விடுதியின் நுழைவாயில், வரவேற்பு அறை, தாழ்வாரங்கள் மற்றும் பொதுவான இடங்கள் அனைத்திலும் உயர்தர சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கேமராக்கள் 24 மணிநேரமும் இயங்குவதையும், அதன் பதிவுகள் குறைந்தது 30 நாட்களுக்கு ரெக்கார்டிங் செய்து சேமிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் ஜார்க்கண்ட் ஊழியர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துதான் அத்துமீறி உள்ளார். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+