இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்
காத்மண்டு: உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று நேபாளம்.. இந்த நாட்டின் முக்கிய பொருளாதாரமே சுற்றுலா பயணிகளின் வருமானம் தான்.. இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள்.. உத்தரப்பிரதேசத்திற்கு அபபடியே மேலே உள்ள நேபாளம் இமயலையில் அமைந்துள்ள நாடு.. இங்கு பொது இடத்தில் குட்கா துப்பிய இந்தியச் சுற்றுலாப் பயணிகளை நேபாளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த நப தட்டிக்கேட்டதுடன் குட்காவை துப்பியவர்களை சுத்தம் செய்யவும் வைத்தார்.
உலகின் அழகான நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு பலரும் சுற்றுலா செல்கிறார்கள்.. அங்குதான் எவரெஸ்ட் சிகரம் இருக்கிறது. அதனால் மலையேற வருபவர்களால் வருமானம் நேபாளத்திற்கு கொட்டுகிறது. அதேபோல் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்றுலாத் தலமான பொக்காரா ஆகியவை மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த சொர்க்கமாக இருப்பதால் பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேபாளம் செல்வது மிகவும் குறைவான செலவில் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட திருப்தி பல இந்தியர்களுக்கு கிடைக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகள் நேபாளத்தில் அதிகமாக இருக்கின்றன. இதனால் வட இந்திய மக்கள் சர்வ சாதாரணமாக நேபாளம் சென்று வருகிறார்கள்.

இது இந்தியா இல்லை
அப்படித்தான் இந்திய சுற்றுலா பயணிகள் சிலர் சென்றார்கள். அவர்கள் காரில் செல்லும் போது சாலையில் குட்கா போட்டு துப்பியுள்ளனர்.இதனை அங்கிருந்த நேபாளவாசி ஒருவர் கவனித்தார். உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்திய அந்த நபர், "இது இந்தியா இல்லை சகோதரரே... இது நேபாளம். சீக்கிரம் தண்ணீரை ஊற்றிச் சுத்தம் செய்யுங்கள்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
சுத்தம் செய்ய வைத்தார்
இதனால் மிகுந்த சங்கடத்திற்குள்ளான இந்திய சுற்றுலாப் பயணிகள், பலமுறை மன்னிப்புக் கேட்டனர். இருப்பினும், அந்த நபர் விடாமல் அவர்களைக் கொண்டே சாலையில் படிந்திருந்த குட்கா கறைகளைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்ய வைத்தார். இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்த அந்த நபர், "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்கள்... இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்துவிட்டு இங்கே வந்து அழுக்கு செய்கிறீர்களே" என்று ஆதங்கத்துடன் கூறினார். வெறும் 'சாரி' மட்டும் சொல்லிவிட்டுச் செல்லாமல், அந்த இடத்தை முறையாகச் சுத்தம் செய்யுமாறு அவர் மீண்டும் வற்புறுத்தி உள்ளார்..
சமுக வலைதளங்களில் பரபரப்பு
பல லட்சம் பேர் பார்த்த இந்த வீடியோ, பொது ஒழுக்கம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட பல சமூக வலைதளப் பயனர்கள், அந்த நேபாள நபர் செய்ததை வரவேற்றுள்ளனர். தவறைப் பார்த்தவுடன் தட்டிக்கேட்ட அவரது துணிச்சலைப் பாராட்டி உள்ளார்கள். அதேநேரம், சிலர் அந்த நபர் ஓவராக போகிறார்..இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று விமர்சிக்கிறார்கள். அத்துடன் ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒப்பிட்டுப் பேசியது தவறு என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வெறுப்பை காட்டுகிறது
ஒரு நெட்டிசன் கூறுகையில், "நேபாள மக்கள் இந்தியாவுக்கு வந்து வேலை செய்யும்போது நாங்கள் அவர்களை அவமதிப்பதில்லை. இவர்கள் செய்தது தவறுதான், அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டையும் குறை கூறுவது வெறுப்பையே காட்டுகிறது. விருந்தினர்களிடம் இப்படி நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது," என்று கூறியுள்ளார்.
நேர்மறையாக பாருங்கள்
மற்றொரு நெட்டிசன், "இது தேசத்தின் மீதான பற்று, எனவே இதை நேர்மறையாகப் பார்க்க வேண்டும்," என்றார். இன்னொரு பயனர், "அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்டது நற்பண்பு," என்று கூறினார். மேலும் சில நெட்டிசன்கள், "அரசாங்கம் பான், புகையிலை, குட்கா மற்றும் மதுபானங்களைத் தடை செய்தால், இந்தியர்களின் பொது நடத்தை 95 சதவீதம் மேம்படும்," என்று கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் இது போன்ற பழக்கவழக்கங்கள் இந்தியர்களுக்கு ஏற்படுத்தும் 'சங்கடமான' நிலை குறித்தும், மக்களிடையே நிலவ வேண்டிய பொது ஒழுக்க உணர்வு குறித்தும் இந்தச் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications