கொடைக்கானல் சுற்றுலா போக போறீங்களா.. காட்ரோடு தாண்டியதுமே கவனம்.. பட்டப்பகலிலேயே ஷாக்
கொடைக்கானல்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி கிராமம் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதுதான் கொடைக்கானல் செல்ல பிரதான வழியாகும். கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் தோட்டம் ஒன்று உள்ளது.இங்கு பட்டப்பகலிலேயே சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. அங்கிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியிருக்கிறது.இதைகண்ட விவசாயிகள் உடனே வனத்துறைக்கு தகவல் தந்தனர். பட்டபகலிலேயே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசல் தலமான கொடைக்கானலுக்கு பலரும் சுற்றுலாவிற்கு வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதுமே குளுகுளுவென இருக்கும் கால நிலை, சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள், தங்குவதற்கு பல்வேறு வகையான விடுதிகள், செயற்கை நட்சத்திர ஏரி, அருவிகள், ஆறுகள், பசுமை பள்ளத்தாக்குகள், பூங்காக்கள், குதிரை சவாரி, புகழ் பெற்ற கோயில்கள் மற்றும் புகழ் பெற்ற தேவாலயங்கள் கொடைக்கானலில் அமைந்துள்ளது.

கொடைக்கானல் சுற்றுலா
கொடைக்கானல் ஊட்டி போல் தேயிலை தோட்டங்கள் உள்ள ஊர் கிடையாது. முழுமையாக அடர்ந்த காடுகளும், தோட்டங்களும் நிறைந்த பகுதியாகும். இங்கு எங்கு திரும்பினாலும் வனப்பகுதி தான் அதிகமாக இருக்கும். கொடைக்கானலுக்கு பலரும் வத்தலக்குண்டு- காட் ரோடு பாதை வழியாகவே செல்கிறார்கள்.இதுதான் பிரதான வழியாகும். இந்த காட்ரோடு சாலை என்பது தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வழியாக செல்லும்.
வத்தலக்குண்டு சாலை
அதாவது கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் மலை ஆரம்பிக்கும் இடம் என்றால் கெங்குவார்பட்டி தான்.இங்கு தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே ஊரை சேர்ந்த அமராவதி என்பவர் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று ஒரு கன்றுக்குட்டியை தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் அமராவதி கட்டி வைத்திருக்கிறார். மற்ற மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அவர் கெங்குவார்பட்டி ஊருக்குள் சென்றுள்ளார்.
கன்றுக்குட்டிக்கு என்னாச்சு
சிறிது நேரத்திற்கு பிறகு அவர் தோட்டத்துக்கு திரும்பினார். அப்போது மரத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டி கழுத்து பகுதியில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமராவதி, அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அப்போது அவர்களும் பார்க்கவில்லை என்று கூறினர். மேலும் அக்கம்பக்கத்தினர் அவரது தோட்டத்துக்கு வந்து பார்வையிட்டிருக்கிறார்கள். அப்போது கன்றுக்குட்டி இறந்து கிடந்த இடத்தில் ஒரு விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளது.
வனத்துறை தந்த தகவல்
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்கள். அப்போது அங்கு பதிவாகியிருந்த கால்தடம் சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தார்கள். இதனை கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பட்டப்பகலில் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை, கன்றுக்குட்டியை கொன்று கடித்து தின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுத்தை உலா
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கெங்குவார்பட்டி, காமக்காப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்கள்அச்சம் அடைந்துள்ளனர். முன்னதாக பெரியகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதியிலும் சிறுத்தைகள் அவ்வப்போது உலா வருகின்றன. தேவதானப்பட்டி வனப்பகுதியில் இரவு நேரத்தில் தோட்டம், கொட்டகைக்குள் புகுந்து ஆடு, மாடுகளை சிறுத்தை கடித்து கொன்று வருகிறது. சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தால், அதனை கண்காணிக்க கெங்குவார்பட்டி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே தற்போது பகல் நேரத்திலேயே சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்றுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications