அப்படி போடு.. சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட காடு.. அதுவும் ஐடி ஏரியாவில்.. மாஸ்டர்பிளான்!
சென்னை; சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சிறுசேரி சிப்காட் அருகே ஓஎம்ஆரில் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வனப் பூங்காவை உருவாக்க உள்ளது.
சென்னையில் ஏற்கனவே பல இடங்களில் மியாவாகி காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு எக்ஸ்பர்ட் அகிரா மியாவாகி. அகிரா மியாவாகி உருவாக்கிய செடி வளர்ப்பு முறைதான் மியாவாகி தொழில்நுட்பம். உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு சென்று இவர் தனது மியாவாகி தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வருகிறார்.
92 வயதாகும் இவர் 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று எப்படி காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். உலகில் இருக்கும் பல பெரு நகரங்கள் இவரின் முறையை பின்பற்றி வருகிறது.

மரம் நடுதல்; மியாவாகி தொழிநுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக மரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம் ஆகும். மரங்கள் சாதாரணமாக வளரும் வேகத்தை விட இந்த மியாவாகி தொழில்நுட்பம் மூலம் 10 மடங்கு வேகமாக வளரும். அதேபோல் 30 மடங்கு அடர்த்தியாக இதன் மூலம் மரங்கள் வளரும். ஒரே இடத்தில் அருகருகே நிறைய உள்ளூர் மரங்களை நடுவது இந்த தொழில்நுட்பம் ஆகும்.
இதில் முக்கியமான விஷயம், வெறும் 20 வருடங்களில் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காடுகளை உருவாக்கலாம். அதிலும் 3 வருடங்களுக்கு பின் இதை கவனிக்க வேண்டியதே இல்லை. அதுவாக தானாக வளர்ந்து கொள்ளும். ஆம், செடிகளை நட்டு 3 வருடம் கவனித்தால் போதும், அதன்பின் அந்த மரங்கள் தானாக வளர்ந்து காடாக மாறிவிடும். இதனால்தான் உலக நாடுகள் மியாவாகி தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்துகிறது.
( ஈசிஆர் அடியோடு மாறுது.. ரூ.25 கோடியில் வருது பிரம்மாண்ட வசதி.. குஷியில் இளசுகள்.. என்னன்னு பாருங்க)
இந்தியாவில் இருக்கும் பெங்களூர் போன்ற பெருநகரங்கள் இந்த மியாவாகி தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையில் மியாவாகி தொழில்நுட்பம் மூலம் குட்டி காடு ஒன்றை உருவாக்க உள்ளனர். சென்னையில் உருவாக்கப்பட உள்ள மூன்றாவது காடு ஆகும் இது. சென்னையில் ஏற்கனவே கோட்டூர்புரம் மற்றும் அடையார் பகுதிகளில் இரண்டு காடுகள் இப்படி உருவாக்கப்பட்டு ,வளர்க்கப்பட்டு வருகிறது.
காடு உருவாக்கம்: இந்த நிலையில்தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சிறுசேரி சிப்காட் அருகே ஓஎம்ஆரில் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான நகர்ப்புற வனப் பூங்காவை உருவாக்க உள்ளது. இங்கே நிலம் ஒன்று வாங்கப்பட்டு அதில் 50 ஏக்கரில் மிகப்பெரிய காட்டை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை வானிலை, ஐடி பகுதியில் மரங்களின் தேவை ஆகியவற்றை மனதில் வைத்து இந்த காடு அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அடையாரில் 2000 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் அடையாரில் நடப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் சதுர அடிக்கு இந்த அடையார் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வளசரவாக்கத்தில் மொத்தம் 700 செடிகள் நடப்பட்டு உள்ளது. இங்கு 45 வகையான செடிகள் நடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் சதுர அடிக்கு இங்கு செடிகள் நடப்பட்டுள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications