சென்னை அப்படியே மாறிடுச்சே.. பெங்களூர் எல்லாம் ஓரம் போங்க.. இந்த ஒரே ஒரு ஏரியா போதுமே.. குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு புதிதாக பல்வேறு புட் கோர்ட்டுகள் கொண்டு வரப்படுகின்றன. முக்கியமாக பாலங்களுக்கு கீழே புதிய உணவு கோர்ட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Chennai Tourism: Chennai gets yet another round-the-clock Food Court-Entertainment Zone in Velachery

ஃபுட் கோர்ட்டுகள்: முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் இரவு நேர வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சென்னை 24 மணி நேர நகரமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பல இடங்களில் கடைகள், புட் கோர்ட்டுகள் திறந்து உள்ளன.

ஏற்கனவே கத்திப்பாரா பாலத்திற்கு கீழே ஃபுட் கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் அண்ணா நகரில் கோரா ஃபுட் கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் ஈசிஆரிலும், ஓஎம்ஆரிலும் ஃபுட் கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் வேளச்சேரியில் 24 மணிநேர சென்னை ஃபுட் கோர்ட்டை உருவாக்கி உள்ளனர். கோரா குழுமம் வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு அடுத்ததாக "கோரா கார்னிவல்" என்ற ஃபுட் ,கோர்ட்டை உருவாக்கி உள்ளனர். 78,000 சதுர அடியில் கேமிங் அமைப்பு, 12டி தியேட்டர், உணவு விற்பனை நிலையங்கள் போன்றவற்றைக் கொண்டு வந்துள்ளனர்.

இரவு வாழ்க்கை: இந்த நிலையில் சென்னையில் இரவு நேர வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை அதாவது கேஎன்கே சாலையை புதிய தோற்றத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். அங்கே 24 மணி நேர கடைகள் திறக்க, சாலைகளை அகலப்படுத்த, அழகாக்க, சாலையோரம் புதிய வகைகள் கடைகள் கொண்டு வர, பப், பார் போன்ற இடங்களை திறக்க முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் எம்ஜி ரோடு, சர்ச் ஸ்ட்ரீட், பிரிட்ஜ் ஸ்ட்ரீட் ஆகிய இடங்களை போலவே இங்கும் மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் உடன் அதிகாரிகள் ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.

இங்கே பப் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக 24/7 பப் கலாச்சாரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கே இதற்காக மிக நீண்ட நவீன பிளாசா போன்ற அமைப்பை உருவாக்க உள்ளனர். இந்த பிளாசா நுழைவு வாயில் வரை பைக் செல்லும் வசதியையும் ஏற்படுத்த உள்ளனர். இங்கே இருக்கும் ரட்லேண்ட் கேட் 4வது தெரு, வாலஸ் கார்டன் 2வது தெரு மற்றும் வாலஸ் கார்டன் 3வது தெரு ஆகிய சாலைகளை மேம்படுத்த உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+