அமெரிக்கரை திருமணம் செய்து.. செட்டில் ஆக பிளானா? டிரம்ப் வைத்த பெரிய சைஸ் ஆப்பு.. இனி கஷ்டம்தான்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கிரீன் கார்டு பெறுவதற்கு வசதியாக அமெரிக்க குடிமகனை அல்லது குடிமக்களை திருமணம் செய்துகொள்வது அமெரிக்காவில் அதிகமான நிலையில், இந்த வழக்கத்திற்கு செக் வைக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

Marrying an American will not get you a Green Card easily anymore with new law in USA

திருமணங்கள் குறையும்

இது போக கிரீன் கார்டு பெறுவதற்கு வசதியாக அமெரிக்க குடிமகனை அல்லது குடிமக்களை திருமணம் செய்துகொள்வது அமெரிக்காவில் அதிகமான நிலையில், இந்த வழக்கத்திற்கு செக் வைக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி கிரீன் கார்டு வேண்டும் என்று பொய்யான திருமணங்களை தடுக்கவும், தற்காலிக திருமணங்களை தடுக்கவும் விசாரணையை அதிகப்படுத்தி உள்ளனர். அதன்பாடு உங்களின் அமெரிக்க இணையை நீங்கள் எப்படி பார்த்தீர்கள்.. அவருடன் எத்தனை முறை டேட்டிங் சென்றீர்கள்? உங்கள் காதல் எவ்வளவு உறுதியானது.. உங்களின் பின்புலம் என்ன.. உங்களுக்கு இடையே சண்டைகள் வந்துள்ளதா என்பதை எல்லாம் விசாரிக்க உள்ளனர். அதோடு அவர்களின் அந்தரங்க வாழ்க்கை, ஒன்றாக வாழும் திறன் என்று அனைத்தையும் சோதனை செய்து அவர்கள் உண்மையில் திருமணம் செய்கிறார்களா அல்லது கிரீன் கார்டு வேண்டும் என்று பொய்யான திருமணத்தை செய்கிறார்களா என்று விசாரிக்க உள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்காவில் கிரீன் கார்டுகள் தருவது நிறுத்தப்பட்டு உள்ளது. அதாவது புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தி உள்ளனர். கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்ய வேண்டும். அதை ஏற்ற பின் அதற்கான லைனில் காத்திருக்க வேண்டும். ஒருவரின் விண்ணப்பம் ஏற்கப்பட பல வருடங்கள் ஆகலாம். அவர்கள் பார்க்கும் வேலை, வாங்கும் சம்பளம், பின்புலம் இதை எல்லாம் பொறுத்து காத்திருப்பு காலம் 1 மாதத்தில் இருந்து சில வருடங்கள் வர கூட நீளும். இந்த நிலையில்தான் அங்கே கிரீன் கார்டுக்கு புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தி உள்ளனர்.

கிரீன் கார்டு சிக்கல்

ஏற்கனவே அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை மீண்டும் மறு ஆய்விற்கு உட்படுத்துவது, அவர்களின் கிரீன் கார்டுகளை நீக்குவது, நாடு கடத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்தியர்கள் பலர் இந்த ஆய்விற்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக வயதான இந்தியர்கள் ஆய்விற்கு உட்படுகிறார்கள். சில இந்தியர்களை, நீங்கள் உங்களின் கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். இதற்காக US Custom and Border Protection (CBP) அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

வயதான இந்தியர்களை சோதனை செய்து உங்களுக்கு கிரீன் கார்டு இருக்க இனியும் தகுதி இல்லை என்று கூறி அவர்களை கிரீன் கார்டுகளை துறந்துவிடுங்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். உடனே உங்கள் கிரீன் கார்டுகளை சரண்டர் செய்யுங்கள் என்றும் பிரஷர் கொடுக்கப்படுகிறது.

கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் அப்படி சரண்டர் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் வழக்கு தொடுக்கலாம். ஆனாலும் சரண்டர் செய்யும்படி அவர்களுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறதாம். சமீபத்தில்தான் துணை அதிபர் வான்ஸ் கிரீன் கார்டு என்பது நிரந்தரமல்ல.. அதை நாங்கள் நினைத்தால் நீக்குவோம் என்றார்.

கோல்டு கார்டு

அமெரிக்காவில் டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த புதிய விதிப்படி, $5 மில்லியன் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். அங்கே கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு.. அதற்கு கிரீன் கார்டு லைனில் நிற்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற லைனில் நிற்க வேண்டியது இல்லை. மாறாக உங்களுக்கு நிறைய சொத்து, பிஸ்னஸ் பின்னணி இருக்க வேண்டும். நீங்கள் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் கட்ட வேண்டும்.

அமெரிக்காவில் குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்

டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு அது தொடர்பாக தற்போது வழக்கும் நடந்து கொண்டு இருகிறது. இனி அங்கே பிறக்கும் குழந்தை ஒன்றிற்கு தானாக குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் அதன் பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். . இனி அங்கே சிட்டிசன்ஷிப் பெறுவதற்கு குடியுரிமை அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான் முடிவை எடுக்க உள்ளார். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.


சிக்கல் மேல் சிக்கல்

இந்த புதிய விதி காரணமாக அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் அமெரிக்க ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அங்கே எல்லா இந்தியர்களிடமும் கிரீன் கார்டு இல்லை.

Take a Poll

பலரும் எச் 1 பி விசா வைத்துள்ளனர். இப்போது ஆண் பெண்களில் ஒருவராவது கிரீன் கார்டு வைத்து இருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்கும். இதன் காரணமாக கிரீன் கார்டு உள்ள இந்திய ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடக்கும். கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களை திருமணம் செய்ய மட்டுமே பெரும்பாலும் ஆணோ, பெண்ணோ முன் வருவார்கள். இது ரிஸ்க்கான விஷயம்.. அதோடு கிரீன் கார்டு உள்ள பல இந்தியர்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் இந்தியர்கள் அமெரிக்கர்களை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. அல்லது அமெரிக்காவில் குடியுரிமை உள்ள பிற நாட்டினரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+